உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, January 29, 2009

இரண்டு Word மந்திரங்கள்

மந்திரம் ஒன்று:
MS office word-ல் அல்லது Outlook-ல் மவுசை தொடாமலேயே வெறும் தட்டச்சுபலகையை தட்டி எளிதாக கட்டம் போட்டு அட்டவணை போடும் முறையை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.மிகவும் பிடித்திருந்தது.இங்கே உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். இது ரொம்பவும் பழைய டிரிக் என்று சொல்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.


மந்திரம் இரண்டு:
எதோ ஒரு காரணத்துக்காக ஒரு சாம்பிள் word டாக்குமெண்ட் 100 பக்கத்துடன் வேண்டுமா? தேடிக்கொண்டிருக்க வேண்டாம்.ஒரே நொடியில் நீங்களே உருவாக்கிவிடலாம்.MS office word-ஐ திறந்து =rand(10,50) என டைப்பி enter-ஐ தட்டுங்கள். ஒரே நொடியில் 50 வரிகளுடன் 10 பாராகிராப்புகளுடைய ஒரு பெரிய டாக்குமெண்ட் ரெடி. அந்த The quick brown fox jumps over the lazy dog வரிகள் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் கொண்டுள்ளதால் எளிதாக உங்கள் "Font" -ஐ சரிபார்த்துக் கொள்ளலாம். இதுமாதிரி எல்லா ஆங்கில எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படும் வாக்கியத்தை pangram என்பார்கள். முன்பெல்லாம் தட்டச்சு எந்திரத்தின் எல்லா அச்சுகளும் சரியாக வேலை செய்கின்றனவாவென பார்க்க இந்த வாக்கியத்தை முதலில் காகிதத்தில் அடித்து சரி பார்ப்பார்களாம்.Mr. Jock, TV quiz PhD, bags few lynx சரியாக 26 எழுத்துகள் மட்டுமே கொண்டது. எனக்கு பிடித்த pangram இதுதான்.
Pack my box with five dozen liquor jugs.


ஒரு மனிதனின் வாழ்க்கையில்
நன்மை செய்தலே
உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி

ரமணிச்சந்திரன் புதினம் "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு" நூல் மென்புத்தகமாக Ramanichandran Konjam Nilavu Konjam Neruppu Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, January 28, 2009

தமிழில் நுட்பங்கள்

என்னத்தான் நடக்குதுனு தெரிந்து கொள்ள FM வானொலிகளுக்கு திரும்பினாலும் சரி அல்லது செய்திகளை கேட்கலாமென்று தொலைக்காட்சி பக்கம் நுழைந்தாலும் சரி பேட்டிகளின் போது பேட்டி கொடுப்பவர் ஒரு புத்தகமாவது எழுதினவராகத்தான் இருக்கின்றார். பேட்டி தொகுப்பாளரும் இவர் இந்த புத்தகத்தை எழுதின ஆசிரியராக்கும் அவர் அந்த புத்தகத்தை எழுதின ஆத்தராக்கும் என்று பெருமையாக கூறிக்கொண்டு பேட்டியை தொடர்வதுண்டு. குழந்தைகள் நல மருத்துவர் என்றால் அவர் அத்துறையை சிறிது ஆய்ந்து அப்படியே ஒரு நூல் எழுதிவிடுகின்றார். ஊர் சுற்றுபவர் என்றால் அவர் அந்த அனுபவத்தை அப்படியே ஒரு நூலாக்கிவிடுகின்றார். கொஞ்சம் ஒருமாதிரி பட்டவர்களெல்லாம் பட்டென புத்தகம் எழுதிவிடுகின்றார்கள். அதனைத் தேடித் தேடிப் படிப்பவர்களும் இருப்பார்கள்தான் போலிருக்கின்றது. ஆங்கிலமெனில் ஆடியன்ஸ் அதிகம்.பிரயாணத்தின் போதெல்லாம் கைகளில் ஒரு புத்தகத்தை இடுக்கிக்கொண்டு அதை முடித்துவிடுவது பலரின் வழக்கமாக இருந்திருக்கின்றது. இப்போதெல்லாம் அவ்விடத்தை ஸ்மார்ட்ஃபோன்களும், MP3 பிளயர்களும், நெட்புக்குகளும் பிடித்துவிட்டன. ஆனாலும் ஆர்வமுள்ளோர் இதுமாதிரியான புத்தகங்களை ஆடியோ வடிவிலாவது, வாங்கிப் படிக்கத்தான் செய்கின்றார்கள். தமிழிலும் audible.com-ல் ஒலிப்புத்தகங்கள் (Tamil audio MP3 books) வாங்கக்கிடைக்கின்றன.

நம்மிலும் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்தோர் அதை ஆய்ந்து நம் மொழியிலேயே புத்தகங்கள் வெளியிட்டால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் டார்கெட் ஆடியன்ஸ் சுருங்கிவிடுவதால் பணப்பை நிரம்புவதில்லை. மாகாணமொழி வெளியீடுகளில் தரம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.அதையும் வெல்ல வேண்டும்.

நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் தன் நேரத்தை தியாகம் செய்து தான் சிறந்திருக்கும் துறையான SQL சார்ந்த தொழில் நுட்பத்தகவல்களை ”எளிய தமிழில் SQL” என்ற தலைப்பில் வழங்கி வருகின்றார்கள்.அவர் கற்றுக்கொடுக்கும் பாங்கு எல்லோரும் கற்றுக்கொள்ளும் அளவில் மிக எளிதான நடையில் அமைந்திருக்கின்றது. SQL கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Learn SQL in easy Tamil

நன்றி http://www.tamilnenjam.org

தமிழில் Cascading Style Sheets கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு சிவராசா பகீரதன் அவர்கள் ”CSS ஒரு ஆரம்ப வழிகாட்டி” என்றதொரு அருமையான சிறு மென்புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள்.அதை நீங்கள் கீழ்கண்ட சுட்டிகளிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.

Download CSS beginners guide tamil.pdf
Download CSS - an introduction_tamil_II.pdf

நன்றி http://www.oorodi.com

தமிழிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு நண்பர் HK அருண் அவர்களின் அருமையான வலைப்பூ இதோ
http://aangilam.blogspot.com



"ஒரு நல்ல நூல்
ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்

"ரொமான்ஸ் ரகசியங்கள்" நூல் மென்புத்தகமாக Romance Ragasiyangal Tamil pdf ebook Download. Right click and Save.Download
Source http://kricons.blogspot.com


Email PostDownload this post as PDF

Tuesday, January 27, 2009

நடக்கும் என்பார் நடக்காது

நடக்கும் என்பார் நடக்காது... நடக்காதென்பார் நடந்துவிடும் என்ற பாடல் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதெல்லாம் இப்பாடல் அடிக்கடி நினைவுக்கு வந்து
போய்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா போய் உருப்படியா எதாவது வேலையைப் பாரும்வோய் என சில நபர்களின் ஊகங்களை படிக்கும் போது சொல்லத்தோன்றும். அதுவே சில நாட்களில் நிஜமாகவே நடக்கும் போது ரொம்பவும் கிலேசமாகிப்போய் விடும்.இப்படித்தான் பீட்ட்ர் ஷெப் (Peter Schiff) எனும் அமெரிக்க பொருளாதார நிபுணர் இன்றைய பொருளாதார நிலைகுலைதலைப் பற்றி 2006-2007-லேயே சொல்லிக் கொண்டிருந்தார். இந்த வீடியோவைப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=v1YhJRXqnXI மற்றவர்கள் கிண்டலாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அது நெசமாகவே போய்விட்டது. இனியாவது அவர் சொல்வதை கேட்கின்றார்களா என்றால் இல்லை.

ஐகோர் பனாரின் (Igor Panarin) என்றொரு ரஷ்ய கல்வியாளரின் கணிப்பு இன்னும் பகீரென்றிருக்கின்றது. 1998-டிலிருந்தே இவர் சொல்லிவருகின்றார். சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்து சிதறியது போல அமெரிக்க ஐக்கிய நாடுகளும் 2010-வாக்கில் நான்கு துண்டுகளாக உடைந்துபோகும் என்று. தாங்க இயலா பொருளாதார பிரச்ச்னைகளும், கலாச்சார சீரழிவுகளும், அதனைத் தொடர்ந்து உண்டாகும் உள்நாட்டு குழப்பங்களும் இதற்கான காரணமாக அமையும் என்றார். சீனர்களின் ஆதிக்கம் மிகுந்து கலிபோர்னிய பகுதிகள் “The Californian Republic”-ஆகவும் டெக்சஸ் பகுதிகள் மெக்சிக்கோ காரர்களின் வசம் போய் “"The Texas Republic”-ஆகவும் நியூயார்க் பகுதிகள் “Atlantic America” என்ற பெயரில் ஐரோப்பிய தாக்கத்துடனும் சிக்காகோ பகுதிகள் ”The Central North American Republic” என்ற பெயரில் கனடாவிடமும் விழுந்து போகுமாம். ”அலாஸ்கா திரும்பவும் ரஷ்யாவிடமே வந்து சேர்ந்து விடும். இப்போது ஒத்திக்கு தானே கொடுத்திருக்கின்றோம்” என்கின்றார் சிரித்தவாறு.”புதிய அதிபர் என்னமோ அற்புதங்களை செய்வார் என எதிர்பார்த்திருக்கின்றார்கள். ஆனால் வசந்த காலம் வரும் போது ஒரு அற்புதங்களும் இல்லை என தெளிவாகிப்போகும்” என்றார்.

இதெல்லாம் அமெரிக்கர்களின் மனஉறுதியை குலைக்க KGB-ன் வாரிசான FSB செய்யும் தந்திரங்களே என்பது எதிர் தரப்பு வாதம்.


"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.

மதன் ”மனிதனுக்குள் ஒரு மிருகம்” கட்டுரை நூல் மென்புத்தகமாக Mathan "Manithanukkul oru mirugam" Tamil Katturai pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, January 23, 2009

Doc தர்மசங்கடம்

முன்னைய இடுக்கமான காலங்களிலும் தன் பணியாளார்களை துரத்தாத ஒரே நிறுவனமாக இருந்த மைக்ரோசாப்டே இப்போது தன் evangelist-களை கழற்றிவிட தொடங்கியிருக்கின்றது. மந்த நிலையின் உக்கிரம் இன்னும் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது. சும்மானாச்சும் சர்கியூட்சிட்டியின் இணையதளம் போய் பார்த்தேன். 60 வருடமாய் கோடீஸ்வரனாயிருந்த ஒருவன் கோமணத்தோடு தெருவில் நிற்பதைபோல உணர்ந்தேன். 34000 பேரின் வேலைக்கு கல்தா.எங்கு போய் கொண்டிருக்கிறோம் ஒன்றுமே புரியவில்லை.இன்றைக்கு வேலை ஒன்றில் இருக்கின்றேன்.காலையில் வேலைக்கு போகும் போது கூட அதே உலகம் அதே சம்பளம். பெரியதாய் மாற்றம் ஒன்றும் இல்லை.என்னமோ ரிஷசன் என்கின்றார்கள். அதன் அர்த்தம் அப்போது புரிந்திருக்கவில்லை. மாலையில் வீடு திரும்பும் போது உனக்கு வேலை இல்லை என்றார்கள். இப்போது புரிகின்றது.என் உலகமும் மாறி இருக்கின்றது.

பயோடேட்டாக்கள் மின்னஞ்சலில் பறந்துகொண்டிருக்கின்றன.தங்குவதற்கு கூடு கிடைக்கும் வரை அவை பறந்துகொண்டே தான் இருக்க வேண்டும். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது. நண்பன் ஒருவன் தன் "ரெஸ்யூமை" Doc வடிவில் அனுப்பியிருந்தான். நம்மில் பெரும்பாலானோர் இதுமாதிரி Doc வடிவில் தான் Resume-களை வைத்திருக்கின்றோம். அவன் ரெஸ்யூமை திறந்து அதன் Properties-ஐ எதேச்சையாக பார்த்தால் அடப்பாவி Title : Robert`s resume என இருந்தது. Author : Robert Wood என இருந்தது. யாரோ ஒருவருடைய Biodata-வை அப்படியே காப்பி அடித்திருக்கின்றான் இவன். உள்ளே அழகாக தன் பெயரை போட்டு எடிட் செய்த அவன் இந்த Word டாக்குமெண்டுகள் தன் கூடவே தாங்கி செல்லும் இந்த Properties metadata தகவல்களை மாற்ற மறந்திருக்கின்றான். அல்லது அவனுக்கு இந்த விஷயம் தெரியாதிருந்திருக்கின்றது. இது போல காப்பி செய்யும் போது உள்தகவலை மட்டும் உங்கள் தேவைக்கேற்ப மாற்றம் செய்வதோடல்லாமல் மறக்காமல் metadata எனப்படும் Title, Author, Subject, Keywords போன்றவற்றையும் உங்களுக்கேற்றார் போல் எடிட் செய்குதல் நமக்கு நல்லது அல்லது குறைந்த பட்சம் இலவச Doc Scrubber மென்பொருள் கொண்டாவது அந்த metadata-களை சுவடே இல்லாமல் எளிதாக அழித்துவிடுவது புத்திசாலித்தனம். இன்டர்வியூக்களில் அனாவசிய தர்மசங்கடங்களை தவிர்கலாம்.(படவிளக்கம்:மேலே உள்ள கோப்பு பெயர் அது கோபாலின் ரெஸியூம் என்கின்றது.ஆனால் அதன் Properties-ஸோ அது வேறு தகவல்களை சொல்கின்றது.)

Download Doc Scrubber
http://www.javacoolsoftware.com/docscrubber.html


"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும்
குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."
-ஆல்பர்ட் ஸ்வேசர்

இரா.முருகன் ”கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்” கவிதைத் தொகுப்பு Ra.Murugan "Kiraamathu Pennin Thalaipirasavam" Tamil Kavithaikal Thokuppu" pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, January 20, 2009

தேடி வரும் தூண்டில்

என்னைப்போல எழுதப்பிடிப்போர் எழுதிக்கொண்டே இருக்கின்றோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம். அது ஒரு ஹாபி...பொழுதுபோக்கு.என்னைப் பொறுத்தவரை அது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பயனுள்ள பொழுது போக்காகிவிட்டது. இதுபோல ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் இன்றைக்கு தமிழில் இணையத்தில் வலைப்பதிவுகளாய் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பேனா பிடித்து ஒரு தமிழ் வார்த்தைகூட ஆண்டுகளாக எழுதாத விரல்கள் இன்றைக்கு இணையத்தில் தமிழில் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பது நல்ல சகுனமே. I guess.

எழுத்துதவிர ஆடியோ வீடியோ திறமைகளில் சிறந்தவர்களை தூக்கிவிடவும் பல தளங்கள் உள்ளன.உதாரணத்துக்கு நல்ல இசைஞானம் உள்ளோர், குரல்வளம் உள்ளோர் அதை வீடியோவாக்கி யூடியூபில் இட்டு கவனத்தை கவரலாம். நடிப்பு திறனுள்ளோர் தமிழில் நல்ல நகைச்சுவை ஓரங்க நாடகங்களை உருவாக்கி யூடியூபில் இட்டு ஜனங்களை ஈர்க்கலாம். உங்கள் மிமிக்கிரி திறமைகளை ஏன் மூழ்கடிக்கவேண்டும்?. "அசத்தபோவது யாரு" பாணி திறமை உங்களில் இருந்தால் சன் டிவி வரை போய்தான் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றில்லையே. ஒரு வெப்கேமராவோ அல்லது கைப்பேசி கேமராவோ வைத்து கொஞ்சம் கொஞ்சம் விளையாடினாலே சீக்கிரத்தில் வீடியோ தயாரிப்பில் வித்தகர் ஆகிவிடலாம். உலகளாவிய ஆடியன்ஸ். தூண்டில் தேடி வரும்.

மக்கள் மனம் கவர உங்களால் வீடியோக்களை தொகுத்து வழங்க முடியுமென்றால் ஒரு ஆன்லைன்டிவியை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் அபிமான பல்வேறு யூடியூப் வீடியோக்களையும் இன்னும் பிற வீடியோக்களையும் தொகுத்து உங்களால் ஒரு ஆன்லைன் டிவியை முற்றிலும் இலவசமாக உருவாக்கமுடியும்.http://www.mogulus.com என்ற தளம் இதற்கான வசதியை உங்களுக்கு தருகின்றது.நகைச்சுவை காட்சிகள், இனிய பாடல்கள், பார்க்க பிடிக்கும் திரைப்படங்களை நீங்கள் அழகாக தொகுத்து வழங்க தொடங்கினால் சீக்கிரத்தில் அரைத்தமாவையே அரைக்கும் பல பிரபல தொலைக்காட்சிகளையும் தோற்கடித்துவிடுவீர்கள். இதோ ஒரு சிம்பிள் சாம்பிள் தமிழ் ஆன்லைன் டிவி http://www.mogulus.com/tvtamil நினைவிருக்கட்டும் பூமாலை கேசட்டுகள் தான் பின்பொருநாள் பிரபல தொலைக்காட்சியானது.


எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

இன்னும் ஒரு படி மேலே போய் உங்களை நீங்களே கூட ஒளிபரப்பு செய்துகொள்ளலாம் நேரடியாக.உங்கள் வெப்கேமை பலருக்கும் பார்க்க லைவ்வாக பகிர்ந்துகொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டு விழாக்களை அயல்ஊர் வாழ் நண்பர்கள் காண இணையத்தில் லைவ் டெலிகாஸ்ட் செய்யலாம் எல்லாம் இலவசமாக.http://www.ustream.tv என்ற தளம் இதற்கான வசதியை தருகின்றது. வெப்கேமராவை எங்கள் சென்னை வீட்டு டிவி முன் வைத்துவிட்டால் சிக்காகோவில் கிடைக்கா சென்னை டிவி சேனல்களையும் சிக்காகோவிலிருந்து காணலாம். ஐபோனிலும் இவ்வீடியோக்களை காண வசதியுள்ளது கூடுதல் பிளஸ். இங்கே ஒரு டெக்கீயை பாருங்கள் 24 மணிநேரமும் லைவ் கேமராவோடு. http://www.ustream.tv/channel/chris-pirillo-live

வெப்கேமராவில் நீங்கள் இருக்கும்போது வீடியோ திரையில் சில சித்து விளையாட்டுகளை எளியமுறையில் செய்ய கீழ்கண்ட ManyCam என்றமென்பொருள் உதவலாம். உங்கள் வெப்கேம் வீடியோ திரையில் எதிர்முனையோர் வியக்க நீங்கள் எழுத்துக்களை எழுதுதலாம். சில அனிமேசன் மாயா ஜாலங்களை செய்யலாம். நெருப்பு ,பூ, பனிபோன்றன விழும் எஃபெக்ட்களை கொண்டுவரலாம். மேலும் பின்புறங்களை இஷ்டத்துக்கும் மாற்றி முகமூடிகளை போட்டு கலாச இந்த இலவச மென்பொருள் உதவும்.
http://www.manycam.com/

வெகுஜன பத்திரிகை குமுதத்தில் இந்த இதழில் "டாப் 10 பிளாக்ஸ்" வரிசையில் நமது வலைப்பதிவிற்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கின்றது.பெரும்பாலும் "போரடிக்கும்" தொழில்நுட்பத்தகவல்களையே தாங்கிவரும் நம் வலைப்பூ அந்த வரிசையில் வந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியமே.நண்பர்கள் பலரும் தகவலை தெரிவித்து வாழ்த்துதல் சொல்லியிருந்தார்கள்.உங்கள் ஆதரவால் இது சாத்தியமாயிற்று. நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். குமுதம் குழுவிற்கும் நன்றி.

ரமணிசந்திரன் பிரிய மனம் கூடுதில்லையே தமிழ் புதினம் மென்புத்தகம். Ramani Chnadran Piriyamanam Kooduthillaye novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்