உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, October 28, 2009

(தபால்) தலை சிறந்த சில

நண்பர் ஸ்ரீராமின் பின்னூட்டத்தை தொடர்ந்து தலைப்பு மாற்றப்பட்டது. முந்தைய தலைப்பு ”(தபால்) தலை சிறந்த தமிழர்கள்”












































நன்றி V.Subramanian


ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்.










பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும் மென்புத்தகம்.Pathinettu Siththarkalin vaalvum vaakkum in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Saturday, October 24, 2009

நம்மை பார்த்துத் தான்

ரொம்ப நாளாகவே அந்த டிவிடி பிளயரை வாங்க வேண்டுமென கோபாலுக்கு ஆசை. போன வீக்கெண்டு வாங்கி வந்திருந்தான். Philips DVP5992. பெஸ்ட்பை- யில் 60 டாலருக்கு கிடைத்ததாம். போஸ்ட் ஆபீசில் கிடைக்கும் USPS movers coupon pack-யை நவிட்டி அதிலிருந்த கூப்பனால் 10% தள்ளுபடியில் வாங்கியிருக்கின்றான். ஆனாலும் அந்த விலை செலுத்த வேண்டி வந்தது. என்ன ஒரே நன்மை விற்பனை வரி கட்டாமல் வாங்கினது போல் இருந்ததாம். இந்த டிவிடி பிளயரில் இருக்கும் USB இண்டர்பேஸ் தான் அவன் பேவரைட். பார்க்க விரும்பும் வீடியோவை நொடியில் பென்டிரைவ் ஒன்றில் காப்பிசெய்து அதை அந்த டிவிடி பிளயரில் செருகி பார்க்கலாம் என்பது தான் அதன் விசேசம். வீணாக சிடி அல்லது டிவிடிக்களை எரிக்க வேண்டியதில்லை. எரித்தும் என்ன பிரயோஜம். சீக்கிரத்தில் கிறுக்கல் விழுந்து விடுகின்றது. அல்லது அழுக்கு பிடித்து விடுகின்றது. இந்தியாவில் ஓனிடாக்காரர்கள் “உங்களை பார்த்துதான் டிசைன் செய்தோம்” என்ற கோஷ வரிசையில் இந்த வசதிகொண்ட டிவிடி பிளையரை வெளியிட்டிருக்கின்றார்கள். சன் டிவியில் பார்த்த நியாபகம். விலை கொஞ்சம் எகிறுமாயிருக்கும். Jpg படங்கள், Mpeg வீடியோக்களையெல்லாம் USB பென்டிரைவில் காப்பிசெய்து அதை அப்படியே தனது HDTV யில் ஓட்டி காட்டினான். நன்றாக இருந்தது. இந்த மாதிரியான டிவிடி பிளயர்களை HDTV-யோடு இணைக்க HDMI எனும் கேபிளை பயன்படுத்தலாம். மற்ற கலர் கலரான நீலம்,பச்சை,சிவப்பு component வீடியோ கேபிள்களை பயன்படுத்தினால் பல கேபிள்களை ஆடியோ வீடியோக்குவென பயன்படுத்த வேண்டியிருக்கும். தரமும் கம்மியாக இருக்கும். இதுவே HDMI கேபிள் ஒரே கேபிளாக இருப்பதோடு தரமும் நன்றாக இருக்குமாம். அமேசானில் ஆறடி HDMI கேபிள் மூன்று டாலருக்கு கிடைக்கின்றது. தனது வீடியோக்களையெல்லாம் சேமித்துவைத்து இப்படி அப்பப்போ வசதியாக தனது டிவியில் பார்க்க Western digital Passport 500GB நல்ல டீலில் கிடைக்குமாவென தேடிக்கொண்டிருக்கின்றான்.100 டாலர்கிட்ட ஆகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு 1GB = 1 டாலர் விகிதத்திலிருந்த ஹார்டிரைவின் விலை இன்றைக்கு 1GB=0.20 டாலராகியிருக்கின்றது நல்ல சேதி. எக்ஸ்ராவாய் ஒரு பவர் அடாப்டரை தூக்கிக்கொண்டு சுத்தாமால் கூடவரும் USB கேபிளே தேவையான பவரை டிரைவுக்கு கொடுத்தால் போர்ட்டபிளாக சட்டைப் பையில் வைத்துக்கொண்டு சுற்றலாம். அதுதான் வெஸ்ட்ரன் டிஜிட்டல் பாஸ்போட்டின் அருமை. இந்த டிவிடி பிளயர்களில் இப்போதிருக்கும் ஒரே குறை NTFS file system வேலைசெய்வதில்லை. FAT32 file system-த்தில் மட்டுமே அந்த USB டிரைவ் ஃபார்மேட்செய்யப்பட்டிருக்கவேண்டும். உங்கள் விண்டோஸ் ஒருவேளை 500gb டிரைவை FAT32-வில் ஃபார்மேட் செய்யவிடாமல் அடம்பிடித்தால் உங்களுக்கு fat32format எனும் இந்த சின்ன மென்பொருள் உதவலாம்.
http://www.ridgecrop.demon.co.uk/index.htm?fat32format.htm

Direct Download link
Fat32format.zip


சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்










வஞ்சிமாநகரம் வரலாற்றுக் கதை மென்புத்தகம்.Vanji Maanakaran Historic Fiction in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Friday, October 09, 2009

படைப்பாளிகளின் பொக்கிஷம்

இயல் மென்புத்தகங்கள் வடிவிலும், இசை MP3-க்கள் வடிவிலும், நாடகம் CD,DVD வடிவிலும் டிஜிட்டல் உலகில் மாறிவிட படைப்பாளிகளுக்கெல்லாம் திண்டாட்டம். முன்பெல்லாம் படைக்க பாடுபட்ட வியர்வைகளுக்கு விலை கிடைத்துக் கொண்டிருந்தது. தங்கள் படைப்புகள் பற்றிய புகழ் பரவப் பரவ திருவிழாக் கொண்டாட்டமாயிருக்கும். இப்போது வைரஸ் கணக்காயும் வலையெங்கும் தங்கள் படைப்புகள் பரவினாலும் கையில் நயா பைசா கிடைப்பதில்லை. விரக்தியில் இணைய இறக்கச் சுட்டிகளைத் தேடி தேடி விரட்டி விரட்டி அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அழிக்க அழிக்க புதிது புதிதான வழிகளில் அவை இறக்கத்துக்கு வருவதால் அதையும் அழிக்க ஓடி இதிலேயே தங்கள் பொன்னான நேரங்கள் வீணாய்ப் போய்க்கொண்டிருக்கின்றது. ரேப்பிட்ஷேர் எனும் தளம் இது மாதியான கோப்புகளை பகிர்வதில் முதலிடம் பிடிக்கின்றது. தினமும் அப்லோட் செய்யும் கோப்புகளில் 2 சதவீதம் வரை அழிக்கப்படுகின்றனவாம். அத்தனை மின்னஞ்சல் வேண்டுகோள்கள் அவர்களுக்கு போய் கொண்டுள்ளன.

இப்படித் தேடித் தேடி ஆன்லைனில் கிடக்கும் உங்கள் படைப்புகளையெல்லாம் அழிப்பதை நிறுத்திவிட்டு அதை நீங்களே இலவசமாய் கொடுங்கள்.எப்படி காசு பண்ண வேண்டுமென நான் சொல்லித் தருகின்றேன் என்று அனுபவபூர்வமாய் தான் பெற்ற படிப்பினையை சொல்லித் தருகின்றார் Nine Inch Nails புகழ் Trent Reznor.

இங்கே அந்த பார்மலாவை என் நடையில் கொடுத்துள்ளேன்.
முதலில் படைப்பாளியான நீங்கள் உஙகள் படைப்புகளுக்கென ஒர் இணையதளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதில் உங்கள் சில பழைய படைப்புகளையும் புதிய படைப்புகளையும் இலவசமாய் வழங்குங்கள்.ஆனால் ஒரு நிபந்தனையோடு. இறக்கம் செய்ய வரும் உங்கள் விசிறியின் மின்னஞ்சல் முகவரியையும் வீட்டு முகவரியையும் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவை எல்லாவற்றையும் ஒரு டேட்டாபேசாக்கிக் கொள்ளுங்கள். இலவசமாய் கிடைப்பதால் அநேக புதிய நபர்களும் உங்கள் படைப்புக்களை இறக்கம் செய்ய வருவதால் நிறைய புதிய விசிறிகளும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.
இப்போது புரிகின்றதா...?
இப்போது உங்கள் கையில் உங்கள் படைப்புகளுக்காக ஆலாய்ப் பறக்கும் விசிறிகளின் பட்டியல். இந்த பட்டியல் தான் உங்கள் பொக்கிஷமே.
இனி அடுத்த படைப்பை வெளியிடும் போது இந்த உங்கள் விசிறிகளை தனியாய் தொடர்புகொள்ளுங்கள்.அவர்களுக்கென விசேட விலைகளை அறிவியுங்கள். உங்கள் கையொப்பமிட்டபடைப்புகளை விசேசமாக அவர்களுக்கு அனுப்பலாம் அல்லது உங்கள் படமிட்ட ஒரு விசேச பரிசோடு அந்த படைப்பை அவர்களுக்கு அனுப்பலாம் இப்படி அந்த உங்கள் விசிறிகளை எப்படியாவது அந்த படைப்பை வாங்கச் செய்துவிடலாம். உங்கள் விசிறிகளை பரந்த உலகில் தேர்ந்து கண்டு பிடிப்பதுதான் கஷ்டம். அவர்களை கண்டு பிடித்துவிட்டால் அவர்களிடம் உங்கள் படைப்பை வாங்கச் செய்ய ஒரு சில காரணங்கள் போதும் என்கின்றார் அவர்.

Connect with Fans (CwF) + Reason to Buy (RtB) = The Business Model
இது தான் அவர் பார்முலா.

நம்மூருக்கும் நம்மாட்களுக்கும் இந்த ஐடியா சரிப்பட்டு வருமாவென தெரியவில்லை. ஆனாலும் இவர் எழுதிய நாவல் வேண்டும் அவர் எழுதிய நாவல் வேண்டும் என்றும் இந்த மென்புத்தகம் வேண்டும் அந்த மென்புத்தகம் வேண்டும் என்றும் எனைக் கேட்டு அநேக விசிறிகள் தேவையோடு தொடர்புகொள்வதுண்டு. அவர்களை எல்லாம் எட்டும் வகையில் காலத்திற்கேற்ப நம் படைப்பாளிகள் தங்கள் வியாபார யுத்திகளையும் மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்று நினைக்கின்றேன். படைப்பாளிகள் நொடிந்து போனால் மொழி எப்படி வாழும் இல்லையா?.

நீங்கள் Outlook Express பயன்படுத்துவீர்களானால் இந்த மென்பொருள் மிக உதவியாக இருக்கலாம்.மாதாவாரியாக *.idx/*.mbx/*.dbx வடிவுகளில் அல்லது eml வடிவில் நீங்கள் சேர்த்துவைத்திருக்கும் மின்னஞ்சல்களை பிற்பாடு அவுட்லுக் எக்ஸ்பிரஸ் உதவியின்றி ஒவ்வொரு மின்னஞ்சல்களாக திறந்து பார்க்க உதவும் சிறிய மென்பொருள் இது.
Mail Viewer - for Outlook Express, Windows Vista Mail/Windows Live Mail and Mozilla Thunderbird message databases as well as single EML files.
http://www.mitec.cz/mailview.html


ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது, “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?










சனிப்பெயர்ச்சி பலன்கள் 2009-2012 மென்புத்தகம்.Sani Peyarchi Predictions 2009-2012 in Tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF

Thursday, October 08, 2009

நேசிக்கின்றோம்

மனிதர்களை மட்டுமல்ல மாக்களையும் நாங்கள் நேசிக்கிறோம் என சொல்லாமல் சொல்கின்றதோ இந்த மென்பொட்டலங்களின் பெயர்கள்.

Yahoo`s Fire Eagle யாஹூவின் நெருப்பு கழுகு இடம்காட்டி எந்திரம்
http://fireeagle.yahoo.net/


Yahoo`s Babel Fish யாகூவின் பாபேல் மீன் மொழிமாற்றி
http://babelfish.yahoo.com/


Puppy Linux நாய்க்குட்டி லினக்ஸ்
http://www.puppylinux.org/


GNU Operating System ஆடு செயலி
http://www.gnu.org/


Python Programming Language பைத்தான் மலைப்பாம்பு கணிணிமொழி
http://www.python.org/


Yellow Dog Linux மஞ்சள் நாய் லினக்ஸ்
http://www.yellowdoglinux.com/


Penguin for Linux பென்குவின் லினக்ஸ்
http://www.linux.org/


Mozilla`s Fire Fox மொசில்லாவின் நெருப்பு நரி உலாவி
http:/www.firefox.com/


Suse Linux பச்சோந்தி ஓணான் லினக்ஸ்
http://www.opensuse.org/en/


Apple`s Snow Leopard Mac OS ஆப்பிளின் பனிச்சிறுத்தை செயலி
http://www.apple.com/macosx/


Software products named after some animal names


வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்










நீதிக்களஞ்சியம் மென்புத்தகம்.Needhi Kalanjiyam Morals and Ethics in tamil pdf ebook Download. Click and Save.
Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்