ஜப்பான்!
சூரியன் மட்டுமல்ல, பலப்பல தொழில் நுட்பங்கள் கூட முதலில் உதிப்பது இங்கிருந்து தான். அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளை கண்ட கண்ட படி எதற்கெல்லாமோ பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாம் இங்கு சொல்லவரும் QR Code (Quick Response) எனப்படும் இருபரிமாணக் கோடுகள் கூட அங்கே ஐந்து வருடத்துக்கு முன்பே பிரபலம். இப்போது தாம் நமக்கு இங்கே உதயமாக தொடங்கியிருக்கின்றது. லவுகீக ஜட உலகத்தை மாய வலை உலகத்தோடு இணைத்து வைப்பது தான் இக்கோடின் மிகப் பெரிதானப் பணி என நான் சொல்லப்போனால் உங்களில் எத்தனை பேருக்கு புரியப் போகின்றது புரியவில்லை. விளக்குகின்றேன்.
பிரபல விளம்பரத்தாள்கள் வீட்டில் வந்து விழும் போது அதில் மேலதிக தகவல்கள் இருப்பதில்லை. வெறும் 50 டாலர் தான் 1TB USB Western Digital பாஸ்போர்ட் எக்ஸ்டெர்னல் டிரைவ்கள் என்பார்கள்.(Corrected) மேற்கொண்டு விவரங்களான அது USB2-வா அல்லது USB3-வா, டேட்டா டிரான்ஸ்பர் வேகம் என்ன? தனியாக பவர் அடாப்டர் வேண்டுமா வேண்டாமா? வாங்கிய பிறரின் அனுபவங்கள் இவையெல்லாம் அந்த அச்சிட்டத் தாளில் அடக்குவது கடினம். விளம்பரத்தில் நீங்கள் படத்தில் காண்பது போல ஒரு சதுரக்கோடு மட்டும் இருக்கும். இதை உங்கள் ஐபோன் வழி அல்லது அன்ட்ராய்டு போன் வழி ஒரு நொடி ஸ்கேன் செய்தால் அது அதில் ஒளிந்திருக்கும் உரலை(URL) படித்து அப்படியே உங்களை குறிப்பிட்ட இணைய தள பக்கத்துக்கு கொண்டு சென்றுவிடும். அடுத்த நொடியில் அந்த ஜடம் பற்றிய சகல தகவலும் உங்களுக்கு கிடைத்துவிடும். சுருங்கக் கூறின் அந்தக் காகித ஜடத்தை சொடுக்கி இங்கே வலைப்பக்கத்துக்கு வந்திருக்கின்றீர்கள். எப்படி இருக்குது லிங்க். மேலே நீங்கள் காணும் QR கோடு நமது இந்த pkp.in வலைப்பதிவுக்கான கோடு. நீங்கள் உங்கள் போனில் ஸ்கேன் செய்தால் அது நம் வலைப்பக்கத்துக்கு கொண்டு போய் விடும். நீங்கள் எதுவும் டைப் செய்ய வேண்டிய தேவையில்லை. இது போல உங்கள் வலைப்பக்கத்துக்கான QR கோடுகளைக் கூட நீங்கள் கீழ் கண்ட சுட்டியில் இலவசமாகஉருவாக்கிக் கொள்ளலாம்.
http://qrcode.kaywa.com
QR கோடை ஸ்கேன் செய்ய, ஐபோன் எனில் NeoReader என்ற பயன்பாடும் அன்ட்ராய்டு போன் எனில் QuickMark என்ற பயன்பாடும் தேவைப்படும். இரண்டுமே இலவச பயன்பாடுகள்.
தமிழ் குட்டீஸ்களுக்கான அம்புலிமாமா வேடிக்கைக்கதைகளை நம் குழந்தைகள் கீழ்கண்ட சுட்டியில் படிக்கலாம். தெரியாதவர்களுக்காக ஒரு குயிக் அறிமுகம்.
http://www.chandamama.com/lang/TAM/index.htm
Talking Tom Cat எனும் ஐபோன் பயன்பாடு, குழந்தைகள் மழலைகள் பேசி விளையாட ஒரு அருமையான இலவச பயன்பாடு.
Need for Speed போன்ற EA-வின் ஐபோன்/ஐபேட் கார் ரேசிங் கேம்களில் நீங்கள் ஆர்வலர் என்றால் அவைகளை நிறுவிக்கொள்ள இப்போது நல்ல தருணமாம். 99¢ டீல் போட்டிருக்கின்றார்கள். வாண்டு ஒன்றின் கண்டுபிடிப்பு. யாருக்காவது பயன்படுமே என்று சொல்லவந்தேன்.
மீண்டு(ம்) வந்த என்னை மிக்க மகிழ்வோடு வரவேற்று பின்னூட்ட மிட்டுச்சென்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
| வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிகப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும். |