ரூ100 கோடி செலவில் சென்னை மகேந்திரா சிட்டியில் பெரிதாக உருவாகிவரும் இன்னொரு மெகா வாகன தொழிற்சாலை உலக புகழ் பெற்ற பிஎம்டபிள்யூ.(BMW-Bavarian Motor Works) 2007-ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடிப்படையில் ஜெர்மனி-மியூனிச்-ஐ சேர்ந்த இந்நிறுவனம் 1913-ல் கார்ல் ப்ரைய்ட்ரிச் ராப் (Karl Friedrich Rapp) என்பவரால் தொடக்கப்பட்டது. உண்மையில் விமான எந்திரங்கள் தாயாரிக்கும் நோக்கில் தான் இக்கம்பெனி துவக்கப்பட்டது.அதனால் தான் இதன் லோகோ நீல வான பிண்ணனியில் சுழலும் வெள்ளை விமான உந்து விசிறி (propeller) போல அமைக்கப்பட்டுள்ளது.பிம்மர்ஸ் என செல்லமாய்
அழைக்கப்படும் இந்த வாகனங்கள் luxury மற்றும் Prestigious symbol-களாக உள்ளன.BMW series,Mini,Rolls-Royce car brands முதலானவை இவர்கள் பிராண்ட்.இக்கம்பெனியின்
விளம்பரவாசகம் "The Ultimate Driving Machine" மற்றும் "Sheer Driving
Pleasure."ஜெர்மனியை தவிர மேலும் கீழ்கண்ட இடங்களில் அவர்கள் தொழிற்சாலைகள் உள்ளது.1.Spartanburg/Greenville, South Carolina 2.Rosslyn, South Africa 3.Shenyang, China
பின்குறிப்பு:இரண்டாம் உலகப்போரின்போது இக்கம்பெனியின் தலைமையகம் கடுமையாக
குண்டுகளால் தாக்கப்பட்டு சோவியத்தினரால் பிடிக்கப்பட்டது.
வகை:லோகோ ரகசியம்
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, April 13, 2006
லோகோ ரகசியம் - BMW
Posted by
PKP
at
4/13/2006 02:52:00 PM
Labels: Logo Secret
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment