அப்படி ஒன்றும் மைக்ரோசாப்டின் விசிறி அல்ல நான். இங்கு மைஸ்பேஸ் பற்றி சொல்லப்போகின்றேன்.
சன் தொலைகாட்சியில் "அசத்தபோவது யாரு" நிகழ்ச்சியில் தம்பி பட இயக்குனர் சீமான் சொன்ன சில நறுக் வரிகள் தெளி தமிழில் எழுத உசுப்பினாலும் மைக்ரோசாப்ட், மைஸ்பேஸ்-ன்னு ஆங்கிலத்தில் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. என்னப் பண்ணுவது?.
பதின்மவயது இளசுகள் திரள் திரளாய் வந்து குவியும் MySpace.com-க்கு தினம் 40 பில்லியன் பேர் வருகின்றனராம். அதோடு தினம் தினம் புதிதாய் 230,000 பேர் அதில் இணைகின்றனராம். இத்தனை சுறுசுறு கணிணிகள் இயங்குவது Windows 2003 server - Microsoft .NET Framework-ல்லாம். இதன் பயன்பாடுகள் C# for ASP.NET -ல் எழுதப்பட்டுள்ளனவாம். எதையும் தாங்கும் போல் ASP.net.
ஆரம்பத்தில்
friendster.com எனும் இணைய நண்பர்கள் வட்டத்தில் அங்கம் வகித்து திளைத்த Chris Dewolfe-ம் Tom Anderson-ம் 2003-ல் ஏன் நாமே ஒரு இணைய நண்பர் வட்டம் எளிதாக, அதிக வசதிகளுடன் , மிக குறைந்த கட்டுபாடுகளுடன் தொடக்க கூடாது வென எண்ணி தொடக்கியதுதான்
MySpace.com. குறுகிய காலத்தில் மீப்பெரும் வளர்ச்சியை அடைந்தது. ஆங்கில தெரிந்த அனைத்து இள வயசு பொடிசுகளும் இதற்கு அடிமைகள் போலாயினர்.
செய்தி நிறுவன முதலை Rupert Murdoch-க்கை இது உறுத்தியது. $580 மில்லியனுக்கு தன் சட்டைப்பையில் வாங்கிபோட்டுக் கொண்டார்.
கழிந்த வருடம் தன் விளம்பரங்கள் மற்றும் தேடல் வசதியை மைஸ்பேசில் உபயோக படுத்த வேண்டும் மென கேட்டு 900 மில்லியன் டாலர்களை கூகிள் நிறுவனம் மைஸ்பேசு-க்கு வழங்கியது. அதாவது இந்த தொகை ரூபர்ட் மர்டோக் மைஸ்பேசை வாங்கிய விலையைவிட அதிகம். தாத்தா இன்னும் இன்னும் பணம் குவித்துகொண்டிருக்கின்றார். கூடவே 106 மில்லியன்கள் 107 மில்லியன்கள் என விசிறிகள் கூட்டம் வேறு MySpace-க்கு பெருகி கொண்டே இருக்கின்றது.
இத்தனைக்கும் மைஸ்பேஸ் நிறுவனத்தில் பணிபுரிவோர் மொத்தம் 300 பேர் தானாம்.
அப்படா தெளிதமிழில் பதிவு போடல் கஷ்டமடோ சாமி!!
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Tuesday, June 26, 2007
எதையும் தாங்கும் ASP.net
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment