இப்போதெல்லாம் காகித மேப்பு வழிகாட்டி புத்தகங்களின் விற்பனை அமெரிக்கா போன்ற நாடுகளில் படுக்க தொடங்கிவிட்டன. சிறிதாய் குட்டியோண்டு கலர் டிவிபோன்ற ஜீபிஎஸ் Global Positioning System (GPS) உபகரணம் காரில் பொருத்திக் கொண்டு ஆசைபடும் இடங்களுக்கெல்லாம் செல்கின்றார்கள். இனிய லேடி குரலொன்று போக வேண்டிய பாதைகளை வலதா இடதாவென எளிதாய் அவ்வப்போது ஓட்டுநருக்கு மேப்போட்டு சொல்லித் தருகின்றாள்.
அந்த காலத்தில் அமெரிக்கா பிறர் அசைவுகளை கண்டறிய தனது ராணுவத்துக்கு பயன்படுத்திய வசதி இப்போது பொது மக்கள் அளவுக்கு வந்துவிட்டது. இதற்காக உங்களுக்கு தேவையானது GPS ரிசீவர் எனும் பொட்டி. Garmin,TomTom போன்ற பிராண்டுகள் பிரபலம்.இப்போதைக்கு 250 டாலர் அளவில் கிடைக்கின்றது.மாத செலவெதுவும் இல்லை. Builtin GPS என்றால் கார் இன்சூரன்ஸ் எகிறும் என்கின்றார்கள். பல செல்போன்களும் இவ்வசதியோடு வருகின்றன.
வானில் இதற்காகவே பிரத்தியேகமாக 24 சேட்டிலைட்டுகள் சுற்றிகொண்டிருக்கின்றனவாம். அவசரத்துக்கு உதவ கூட மூன்று சேட்டிலைட்கள். இந்த 27 சேட்டிலைட்களும் செத்தால் மொத்த GPS வசதியும் செத்துவிடும். பூமியிலிருந்து 12,000 மைல்கள் தொலைவில் சூரியனிலிருந்து எடுக்கும் சோலர் ஆற்றலால் இடையறாது பூமியை இவை சுற்றி வருகின்றன. இவைகள் தான் இன்றைக்கு அமெரிக்காவில் மில்லியன் கணக்காணவர்களுக்கு ரோடுகளில் வழிக்காட்டி.
நான் எங்கே இருக்கிறேன்? பெங்களூரிலிருந்து 331 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து 444 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பதியிலிருந்து 152 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளேன் என சொன்னால் கண்டுபிடிக்க முடியாதாவென்ன? அது சென்னையாதான் இருக்கமுடியும் அல்லவா.அதைதான் ஜீபிஎஸ்-ம் செய்கின்றது. இதை Trilateration என்கின்றார்கள். அதாவது GPS வேலைசெய்ய அதுவால் குறைந்தது 3 சேட்டிலைட்டுகளிடம் பேச இயலவேண்டும்.High-frequency, Low-power radio signals இதற்காக பயன்படுத்தப்படுவதால் கட்டிடங்களிடையே சென்றால் வானிலை மோசமானால் வசமாய் மாட்டிக்கொள்வீர்கள்.அந்த லேடியால் உங்களுக்கு உதவமுடியாது.
மற்றபடி தனியே ஜாலியாக எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். கூகிள் மேப்பில் டைரக்சன் போட்டு பிரிண்ட் அவுட் எடுக்க தேவையில்லை.
நியூஜெர்ஸியில் நான்வெஜ் வெட்ட ஆச்சீஸ் செட்டிநாட்டுக்கு செல்ல கூட அவள் வழி சொல்வாள்.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, August 09, 2007
ஆச்சீக்கு வழிகாட்டும் லேடி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//இந்த 27 சேட்டிலைட்களும் செத்தால் மொத்த GPS வசதியும் செத்துவிடும்.//
இதை வைத்தே ஒரு Scifi எழுதலாம் போல இருக்கே!!
Post a Comment