வடக்கே காயலான் கடை என்பார்கள். தெற்கே ஆக்கர் கடை என்போம். "பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்" எனக் கூவி மிதிவண்டி மிதித்து உழைப்போனுக்கு புரமோசன் அது. அதில் கூடச் சிலர், வந்த பழைய சப்பிப்போன டப்பா சரக்குகளிடையே தங்கம் கிடைத்து மாட மாளிகைகள் கட்டியதாகவும் கதைகள் கேள்விபட்டிருக்கின்றேன். கூவிக் கூவி விற்போனை ஆங்கிலத்தில் Hawker என்பர். அதுதான் ஆக்கர் ஆனதாவென தெரியவில்லை. அந்த அழுக்கான ஆக்கர் கடையிலும் கொட்டிக்கிடக்கும் புத்தகங்களில் எப்போதுமே ஒரு ஏக்கம் இருந்ததுண்டு.
ஆன்லைனிலும் உள்ளது பழைய மென்பொருள்களுக்கான காயலான் கடை. ஆனால் இலவசமாய். முன்பு கன்னாபின்னாவென பயன்படுத்தப்பட்டு இப்போது சுத்தமாய் நாம் மறந்து போன பல மென்பொருள்களை இங்கே கொட்டி வைத்திருக்கின்றார்கள். சும்மா தேவைப்பட்டால் போய் இறக்கம் செய்து நிறுவி கொஞ்சம் அந்தகாலத்துக்குப் போய் வரலாம்.
http://www.vetusware.com
அது போல பழைய டாஸ் கேம்களையும் இங்கே ஒரு ரசிகர் சேர்த்துவைத்திருக்கின்றார். அக்கால விருப்புக்களை தேடி ஆடி மகிழலாம்.
http://abandonia.com
வந்த பாதையை திரும்பிப்பார்த்தல் அது ஒரு இன்டரஸ்டிங் தான். இல்லையா?. வாழ்க்கையே வெங்காயம் போன்றது. ஒவ்வொரு ஏடாய் எடுத்துக் கொண்டே வாருங்கள். சில பொழுது கண்களில் நீர் வடியும். நிற்க.
இங்கே வழக்கமான ஒரு பிரச்சனை வரும். டாஸ் பயன்பாடுகளும் டாஸ் கேம்களும் இன்றைய கணிணிகளில் ஓடாதே என்பது தான். அதற்கு தீர்வாகத்தான் வந்திருக்கின்றது dosbox . இந்த இலவச பயன்பாடு உங்கள் பழைய Dos கேம்களையும் அப்ளிகேசன்களையும் எந்த கணிணியிலும் ஆட ஓட விடுகின்றது.முயன்று பாருங்கள்.
http://www.dosbox.com
ஒரு நிமிஷம்... இறக்கம் செய்யும் மென்பொருள்களை வைரஸ் சோதனை செய்து கொள்ளல் நல்லது அல்லவா? http://virusscan.jotti.org அல்லது http://www.virustotal.com போய் இறக்கம் செய்த அந்த பழைய மென்பொருள்களை இலவசமாய் ஒரு வைரஸ் செக்கப் செய்துகொள்ளல் உங்கள் கணிணிக்கு எப்போதுமே ஆரோக்கியம்.
அப்போ வரட்டா?
இஸ்லாமிய புத்தகம் சஹீஹீல் புகாரி இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Islamic book Sahihi Buhari in Tamil pdf ebook Download. Right click and Save.Download
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Monday, June 09, 2008
ஆக்கர் கடை
Posted by
PKP
at
6/09/2008 11:16:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வணக்கம் PKP சார்... நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் நிறைய தகவல்கள்களை தந்துகொண்டு இருக்கிறீர்கள். நன்றி,,,
எப்போதோ ஒரு முறை பழைய 'டாஸ்' விளையாட்டான 'டேவ்' பற்றிக் கேட்டேன். அதற்கு இவ்வளவு சீக்கிரம் நல்ல பதிலைக் கொடுத்ததற்கு நன்றிகள்.
உங்களது பிகேபி டிரைவில் அந்த 'டேவ்' விளையாட்டுக்கும் இடமளித்ததற்கு நன்றி.
நலமா? - புகாரி ஷரீப் - நன்றி
Post a Comment