உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, September 17, 2008

ஒரு துகளை தேடி

நூறு ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரான் எனும் துகளை கண்டுபிடித்தார்கள். அதை ஓட விட்டு பின்பு அதனை மின்சாரம் என்றார்கள். இன்றைய நவ நாகரீக மின்னுலகம் மலர்ந்தது.

இதுபோல இன்னொரு துகளும் கட்டாயம் இருக்கவேண்டும். அதை நாம் எப்படியாவது கண்டு பிடித்தேயாகவேண்டும். அதை நாம் கண்டுபிடிக்காததால் தான் இன்னும் அநேக மர்மங்கள் உலகில் நிலவுகின்றன என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் CERN விஞ்ஞானிகள். நாம் வாழும் இந்த பூமிக்கு புவி ஈர்ப்புவிசை எப்படி வந்தது? அதற்காக காரணம் பூமியின் நிறை என்றால் நிறை என்றால் என்ன? நமக்கு ஒளி தெரியும், அது போகும் வேகமும் தெரியும் அப்படியென்றால் இருளென்றால் என்ன? இப்படி அநேக கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லையாம். பலசமயங்களில் Higgs boson-னு ஒரு துகள் இருப்பதாக தியரிட்டிக்கலாக கணக்கில் போட்டு காலத்தை ஓட்டினாலும் அந்த மகா "கடவுள் துகளை" எப்படியும் பிராக்டிக்கலாக பார்த்துவிடுவது என்ற நோக்கத்தில் தான் ஜெனிவா அருகே அந்த மகாபெரிய எந்திரத்தை நிர்மாணித்திருக்கின்றார்கள். கடவுளுக்கே கொஞ்சம் திக்திக்கென்றுதான் இருக்கும்."பாவிப்பசங்க எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்களோ"

என்னத்தைக் கண்டுபிடிக்கிறது முதலில் உங்கள் கணிணி நெட்வொர்க்கை பாதுகாப்பா வைக்க கத்துக்கோங்கடாவென ஒருஹேக்கர் கும்பல் ஏற்கனவே LHC-யின் கணிணி நெட்வொர்க்கை ஹேக்கி அங்கே ""We are 2600 - don't mess with us"" என கொடியும் நாட்டிவிட்டு வந்திருக்கின்றார்கள்.விஞ்ஞானிகள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். நல்லகாலம் அடுத்து ஒரு அடி வைத்திருந்தால் அந்த ராட்சச எந்திரத்தின் கணிணி அறையில் நுழைந்திருப்பார்களாம். போதுமடா சாமி என இதுவரைக்கும் ஆன்லைனில் வைத்திருந்த அந்த நெட்வொர்க்கை ஆப்லைனாக்கி விட்டார்கள். அதனால் அவர்கள் இணைய தளமான www.cmsmon.cern.ch இப்போது டவுன்.இத்தனைக்கும் அவர்கள் ஓட்டுவது என்னமோ Scientific Linux ஆம்.
உங்களுக்கு தெரியுமா CERN தான் இன்டர்நெட்டின் பிறப்பிடமும் கூட.நிற்க.

ஏற்கனவே நாம் செய்திருக்கும் அட்டூழியத்தில் பூமி தாங்கமாட்டேங்குது. போகுமிடமெல்லாம் நிலஅதிர்ச்சி, சுனாமி, சூறாவளி, பெருவெள்ளம் அப்படி இப்படினு அது தள்ளாடிக்கொண்டிருக்க இது தேவையா? தப்பி தவறி அது ஒரு "கருந்துளை"யை உண்டாக்கினால் இந்த பூமி தாங்காதே என்பது சிலரின் கருத்து. பிளாக் ஹோல் எனப்படும் இந்த கருந்துளைகள் "bottom less pit" அதாவது அடிவாரமே இல்லாத துளை போன்றது. இதன் ஈர்ப்பு சக்தியும் மிக மிக அதிகம். அந்த பக்கமாய் போகும் ஒளிக்கதிரை கூட இது இழுத்து சாப்பிட்டுவிடுமாம். இந்த மாதிரி ஒரு பிளாக் ஹோல் உருவாகி அது இன்னும் நமக்கு தொல்லை தர அது நமக்கு தேவையாவென ஒரு கும்பல் காட்டு கத்து கத்துகின்றார்கள்.

அட போங்கையா இதுமட்டும் சக்ஸஸ் ஆகி "அந்த" ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் மனுஷனுக்கு சாவே வராமலிருக்கும் சூட்சுமம் வரைக்கும் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். ஏற்கனவே டாலருடன் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் யூரோ பிராந்தியம் தான் இனி அடுத்த வல்லரசுவென இப்பக்கம் கொண்டாடுகின்றார்கள்.

இப்ப நடப்பது வெறும் வெள்ளோட்டம் தான். அடுத்த ஸ்ப்ரிங்கில் தான் நிஜ விளையாட்டு ஆரம்பமாகின்றது.

"All should leave Geneva"-ன்னு நம்ம நாஸ்ட்ரொடாமஸ் (Nostradamus) தாத்தா முன்னமேயே எதுக்கு சொல்லி வச்சிட்டு போனாருனுதான் தெரியலையே.

(இதெல்லாம் ஒரு சாமானியனின் கருத்துக்கள்.தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே)

சேரன் கவிதைகள் ஒரு நூறு "நீங்கள் இப்பொழுது இறங்கும் ஆறு" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Cheran kavithaikal "Nee Ippodhu Irangum Aaru" in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Related Posts by Categories8 comments:

Tech Shankar said...

Thanks PKP.

Anonymous said...

ரிஸ்க் எடுக்குறது எங்களுக்கு ரஸ்க் சாபிடுர மாதிரி! :)

sant said...

sir i have created my blog.
http://www.rapidshare-software.blogspot.com/
review it. plz tell me some suggesstion. i am follower of ur blog.

Subash said...

ஃஃஇப்ப நடப்பது வெறும் வெள்ளோட்டம் தான். அடுத்த ஸ்ப்ரிங்கில் தான் நிஜ விளையாட்டு ஆரம்பமாகின்றது.ஃஃ

ஒக்ஆடாபர் 10ம் தேதி தெரிந்துவிருமென்று நினைக்கிறேன்.

எதையும் தாங்கும் இதயம் - சுபாஷ்
ஹிஹி

நானும் இதைப்பற்றியொரு பதிவிட்டிருக்கிறேன் ஐயா.நேரமிருந்தால் பார்த்து ஏதாவது சொன்னா சிக்கபசங்க எங்களுக்கு உபயோகமா இருக்கும்.

Subash said...

நாஸ்ட்ரொடாமஸ் தாத்தா பற்றி அறியத்தரமுடியுமா?
ஆங்கிலத்தில் ஸ்பெலிங் என்ன?
4ம் உலப மஹா யுத்தம் கங்கைக்கரையில் முடியுமென்றாரே அவரா?

Muhammad Ismail .H, PHD., said...

அன்பு நண்பா பிகேபி,

இப்போதைக்கு இந்த "கொலைடரால்" நாமனைவரையும் "கொலை" செய்ய இயலாதாம் !!!!. காரணம் நேற்று அதன் சுரங்க பாதையில், செக்டர் 34 ல் இரு மீப்பெரு காந்தங்களுக்கு இடையில் மின் சுற்று பழுதினால் பெருமளவில் திரவ ஹீலியம் கசிந்து விட்டது. அதனால் "கொலைடருக்கு" இரண்டு மாதம் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் தொடர்ந்து "கொலைடர்" பயமின்றி வலைப்பதியவும். மேலும் நிறைய மின் நூல்களை எங்களுக்கு தரவும். இது மிக முக்கிய விஷயம். இல்லையென்றால் நானே ஜெனீவா போய் அந்த "கொலைடரின்" இயக்கத்திற்கான பித்தானை அழுத்தி விடுவேன்.


யாருப்பா இதுக்கு "கொலைடர்" என்று பெயர் வைத்தது? பேரக் கேட்டலே சும்மா ஈரக்குலை யெல்லாம் நடுங்குது. ஹிஹிஹி !!!

Thameemul Ansari said...

What happen Mr. PKP
Since 4 days there is no more post.....
I am eager to see your post
"Kaaka vaikatheenga Mr.PKP"
Tnx
Thameem

தென்றல்sankar said...

சாமானியனின் கருத்துக்கள் சாதாரனமாக இல்லை."பிகேபி" பேரை கேட்டால் சும்மா அதிருதில்ல:):)----

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்