உச்சி வானத்தை எட்டும் படியாக கிமு காலத்திலேயே எழுப்பப்பட்டது ”பர்ஜ் பாபில்”. இந்த ”பர்ஜ் பாபில்” டவர் கட்டப்பட்ட இடம் துபாயிலிருந்து ரொம்ப தொலைவிலில்லை.இந்த டவரிலிருந்து தான் பல மொழிகள் தோன்றியதாக கதை சொல்வார்கள். அப்படி பார்க்கப்போனால் ஈராக் தான் அனைத்து மொழிகளின் பிறப்பிடமும்.இதனால் தானோ என்னவோ யாஹூவும் தனது மொழிமாற்றி தளத்துக்கு பாபேல்பிஷ் என பெயர் வைத்தது. http://babelfish.yahoo.com
கடந்த 4ம் தியதி திறந்து வைக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடத்தின் பெயர் ”பர்ஜ் துபாய்” 2717 அடி அதாவது 828 மீட்டர் உயரம் கொண்டது.இதன் புதிய பெயர் பர்ஜ் கலீபா (Burj Khalifa) என்பதாம். எல்லா இடமும் ஒரே பெயர்மாற்றம் தான். சிக்காகோ வருபவர்களின் கவனத்திற்கு. சிக்காகோவின் புகழ்மிக்க சியர்ஸ் டவரின் பெயரையும் Willis Tower என மாற்றிவிட்டார்களாம். எல்லா இடமும் பெயர்மாற்றம் ரொம்ப முக்கியம் போலிருக்கின்றது. பர்ஜ் கலீபா டவரிலுள்ள சாளாரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபத்து நாலாயிரத்த்தை தாண்டுமாம். செலவு 1.5 பில்லியன்கள்.
கீழே நீங்கள் காணும் படங்கள் அங்கு போய் நான் எடுத்தவை அல்ல ஆயிரக்கணக்கான எண்ணிக்கை கொண்ட நமது தமிழ் வலைப்பூக்களில் ஏற்கனவே இப்படங்கள் வலம் வந்திருக்கலாம். சத்தியமாய் கட் அண்ட் பேஸ்ட் செய்தது தான். யார் எந்த படங்களை அல்லது எந்த தகவல்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார்கள் என டிராக் செய்வது இயலாத காரியம். எனக்கு பிடித்தவற்றை மறக்காமலிருக்கவும் பிற்பாடு ரெஃபர் செய்யவும் வசதியாக இங்கே சேமிக்கின்றேன். அவ்வளவே.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, January 06, 2010
உயர உயரே
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
nice photos
சூப்பர் தலைவா.. நல்ல தகவல்.
டவரின் அரை உயரத்தில், ஹெலிபேடுடன் உள்ள ஒரு ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கும் பர்ஜ் என்று பெயரில் அழைத்தார்கள். இப்பொழுது இது!
அந்த பர்ஜ்-ம், ’உயர கட்டிட வரிசையில்’ இருந்ததுதான். இப்பொழுது என்னாயிற்று?
சொன்னால் அறிந்துகொள்வேன்..
அன்புடன்
http://kaaranam1000.blogspot.com
Post a Comment