உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Monday, January 24, 2011

வாமுக‌ : ஸ்மார்ட் போன்கள்


"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌" வ‌ரிசையில் இன்று ஸ்மார்ட் போன்கள் என‌ப்ப‌டும் கணிப்பேசிகள் பற்றி பார்க்கலாம். முன்பைப்போல கைப்பேசிக‌ளின் ப‌ய‌ன்பாடு வெறும் பேச‌வும், டெக்ஸ்ட் செய்ய‌வும் என்றில்லாது இன்றைக்கு அதை இணைய‌த்தோடு இணைய‌ச்செய்து, அதற்கு ப‌ல்வேறு புத்திக‌ளையும் கொடுத்து அதை நாம் அநேக‌ம் செய்ய‌ வைத்திருக்கின்றோம். சீக்கிரத்தில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க‌ உத்தேச‌த்திலிருப்போர்க்கு கீழ்க‌ண்ட குறிப்புக‌ள் உதவலாம்.

1.ஆப்பரேட்டிங் சிஸ்டம் : ஸ்மார்ட் போன்க‌ள்,க‌ணிணிகளைப் போல‌வே ஏதாவ‌து ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு வ‌ரும். எகா: கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbian அல்லது MeeGo. இந்த‌ OS-‍க‌ளில் எந்த‌ OS உங்க‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து ச‌வுக‌ரிய‌மான‌து என‌ முடிவு செய்து கொள்ளுங்க‌ள். ஒவ்வொன்றும் அத‌ற்கென‌ "பய‌ன்பாடு ச‌ந்தை"க‌ளை கொண்டுள்ள‌ன.‌ ஐமீன் AppStore or Application Marketplace.எப்ப‌டியும் உங்க‌ள் ஸ்மார்ட்போன் மேற்சொன்ன‌வைக‌ளில் எதாவ‌து ஒரு OS-ஐ கொண்டிருப்ப‌தாக‌ பார்த்துக்கொள்ளுங்க‌ள். என‌து ப‌ரிந்துரை Android. முடியுமெனில் iOS4.

2. இணைய இணைப்பு வசதிகள் : உங்க‌ள் ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக Wi-Fi இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கூடவே உங்கள் இடம், சூழலுக்கேற்ப 4G, UMTS/HSDPA அதாவது 3G,GPRS, EDGE போன்ற இணைய இணையும் வசதிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3.தொடுதிரை : சிலருக்கு எல்லாமே டச் ஸ்கீரினால் செய்ய முடியும். சிலருக்கு டச் ஸ்கீரின் என்றாலே அலர்ஜி. உங்கள் ஸ்மார்ட் போன் எது கொண்டிருக்க வேண்டுமென நீங்க‌ளே முடிவுசெய்து கொள்ளுங்க‌ள். சில‌ கணிப்பேசிக‌ள் இர‌ண்டுமே கொண்டு வ‌ருகின்ற‌ன‌. ட‌ச் ஸ்கிரீனெனில் Capacitive Touchscreen ந‌ல்ல‌ தொடு உண‌ர்வை தரும். எதற்கும் வாங்கும்முன் ஒரு முறை தொடுதிரையை தொட்டு பார்த்து அது உங்களுக்கு லாயக்காவென தெரிந்துகொள்ளுத‌ல் ந‌ல்ல‌து.பிற்பாடு விர‌ல்க‌ளால் மொத்து மொத்தென திரையை மொத்துவ‌தை த‌விர்க்க‌லாம்.யூடியூப் வீடியோ பார்வைக‌ளுக்கு ந‌ல்ல‌ Display Resolution இருப்பது ந‌ல்ல‌து.விரல்கள் விளையாட வசதியான அளவு Display Size வேண்டும்.

4.நினைவகம் : ப‌ய‌ன்பாடுக‌ளை நிறுவ‌ அதிக‌ Internal Memory தேவைப்ப‌டும்.GB க‌ண‌க்கில் இருப்ப‌து ந‌ல்ல‌து.

5.பேட்டரி : கடைசியாக ஆனால் மிக முக்கியமாக battery life.

கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் வேதாக‌ம‌ புத்தகம் த‌மிழில் ஒரு ஐபோன்/ஐபேட் ப‌ய‌ன்பாடாக‌ ஆப்பிள் AppStore-ல் வ‌ந்துள்ள‌து. தேவையுள்ள‌வ‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ இற‌க்க‌ம் செய்து நிறுவிக் கொள்ள‌லாம்.
AppStore link to Tamil Bible - Reference iPhone iPad App by Joy Solutions


Email PostDownload this post as PDF

Related Posts by Categories8 comments:

Philosophy Prabhakaran said...

செல்போன் தொழில்முட்பம் பற்றிய தகவல்கள் நன்று... QWERTY போன் தொடர்பான தகவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்...

மாணவன் said...

அலைபேசி வாங்குவதற்கான மிகவும் பயனுள்ள குறிப்புகள்

பகிர்வுக்கு மிக்க நன்றிங்க ஐயா

nice said...

thanks for sharing boss.....

Speed Master said...

ஆப்பிள் ஓ கே வா

Jafar ali said...

//பிற்பாடு விர‌ல்க‌ளால் மொத்து மொத்தென திரையை மொத்துவ‌தை த‌விர்க்க‌லாம்.// நல்ல நகைச்சுவை!

Anonymous said...

Hi PKP,
1.Could you please tell me about Java Os? Recently i bought Samsung monte which has Java os.

2.Is Iphone support Tamil font?

Thanks

சே.வேங்கடசுப்ரமணியன் said...

எங்கே சார் போயிருந்தீங்க......கண்ணே பூத்து போச்சு.தூங்கி எழுந்ததும் பார்த்து கண்ணத்துல போட்டுக்கர கோபுரம் மாதிரி நெட்ல ஒக்காந்தவுடன் கை தானாக உங்கள் வலை பக்கத்தை தான் தட்டும்.அதுவும் கடைசிபாராவுக்கு பிறகு வரும் தத்துவமும்.....டவுன்லோடுக்கான மென்புத்தகமும்...என் பேவரெட்.வாங்க சார் எங்களுக்காக எழுதுங்க.

www.sureshbabuvinitulaa.blogspot.com said...

உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாகவே உள்ளது.சில நாட்களாக உங்களை காணவில்லையே?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்