உலகில் ஜெனிக்கும் உயிர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை மூச்சுகளை இறைவனிடமிருந்து வாங்கி வந்திருப்பதாகவும், அந்த மூச்சுகளை நாம் பூமியில்
செலவழிப்பதாகவும் இதனால் வேகமாய் மூச்சு விடுவோர் வேகமாய் இறைவனிடம் திரும்பிவிடுவதாகவும் மெதுவாய் ஆற அமர மூச்சுவிடுவோர் இன்னும் கொஞ்சநாள் கூட பூமியில் வாழ்வதாகவும் முன்னோர்கள் நம்பியிருக்கிறார்கள். இதற்கு நாம் அத்தாட்சி வேண்டுமானால் விலங்குகளிடம் போகலாம். நிமிடத்திற்கு நான்கு மூச்சுகள் மட்டுமே விடும் கடல் ஆமைகள் முன்னூறு ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.ஆனால் குரங்குகள் நிமிடத்திற்கு 32 முறை மூச்சுவிட அதன் ஆயுட்காலமோ அதிகமாய் போனால் 25 வருடங்கள் மட்டுமே.ஹம்மிங் பறவைகள் நிமிடத்திற்கு 360 தடவைகள் மட்டுமே மூச்சுவிட அதன் அதிக பட்ச வாழ்நாட்கள் 3 ஆண்டுகளாக குறைந்துவிடுகின்றது.Shrews எனப்படும் நச்செலிகள் இன்னும் பாவம், நிமிடத்திற்கு 660 தடவைகள் வேகமாக சுவாசித்து அதனை செலவழித்து விடுவதால் அதன் ஆயுசுநாட்களோ 18 மாதங்கள் மட்டுமே.இப்படி இது ஒரு நிரூபிக்கப்ப்ட்ட உண்மையாக இருக்கின்றது.இதைத் தான் ஆர்ட் ஆப் லிவிங் கிளாசுகளில் பிரீதிங் எக்சசைஸ்சாக பயிற்றுவிக்கின்றார்கள். மெதுவாக மூச்சுவிடு அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழலாமென்கின்றார்கள்.
இந்த மூச்சு சமாச்சாரம் எல்லா சமயங்களிலும் உயர்த்தி பேசப்பட்டிருக்கின்றது. வாயைத் திறந்து இறைவனை பாடவேண்டும்.போற்றவேண்டும்.ஓதவேண்டும் என்று சொன்னதெல்லாம் மறைமுகமாக இந்த மூச்சு பயிற்சி செய்யவாக இருக்கலாம். பாடும்போது நம்மை அறியாமலே நாம் மூச்சு பயிற்சி செய்கின்றோம். இந்து மதத்தில் பிராணயம் யோகாவெல்லாம் இந்த மூச்சை சுற்றியியே வருகின்றது. கிறிஸ்தவ இஸ்லாமிய சமயங்களிலும் முதல் மனிதனான ஆடம் நாசியில் இறைவன் காற்றால் ஊத அவனுக்கு உயிர்வந்தது என்கின்றது.தமிழ் அறிவியல் கூட ஆக்சிஜனை பிராணவாயு அல்லது உயிர் வாயு என்கின்றது.
உட்கார்ந்த இடத்திலிருந்தே உடற்பயிற்சி செய்யலாமென எட்டாம் வகுப்பில் ஆசீர்மணி வாத்தியார் சொல்லிகொடுத்ததும் இதைத் தான். ஓடி ஆடி எல்லாம் எக்சசைஸ் செய்ய வேண்டியதில்லை.ஆரோக்கியமான உணவும் நல்ல குடிநீரும் சாப்பிட்டு மெதுவாக இந்த பிரீதிங் எக்சசைஸ் செய்தாலே இட் கவர்ஸ் எவ்ரிதிங் என்பார். குகைகளிலும் குன்றுகளிலும் தீர்க்காயுசாக வாழும் குருக்களும் யோகிகளும் ஜாகெர்ஸ் பார்க் போய் ஜாகிங்கா செய்கிறார்கள். எல்லாம் மூச்சுப் பயிற்சிதான். இதயச்சுவர்களையும், காற்றுப்பையின் உந்துச்சக்தியையும் இரத்த ஓட்டத்தையும் அது பார்த்துக் கொள்ளும் என்பார்.
அப்படியே நாற்காலியில் நீண்டு நிமிர்ந்து அமர்ந்துகொள்.
மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, உன் காற்றுப்பையை முழுவதுமாக காற்றால் நிரப்பு.
காற்று நிரம்பிய நுரையீரலை அப்படியே மூச்சை அடக்கி பிடித்துக்கொள். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரமும் அடக்கி பிடித்துக்கொள்.
முடியவில்லை எனும் தருணம் வரும் போது மெதுவாக, மிக மெதுவாக் உள்ளிருக்கும் காற்றை வெளியே ரிலீஸ் செய். ஒரு சொட்டும் இன்றி முழுதாக அதை ரிலீஸ் செய்.
மீண்டும் மேற்சொன்ன படியே இன்னும் ஒருமுறை செய்.
அப்படியே இன்னும் எவ்வளவு முறை உன்னால் செய்ய முடியுமோ அவ்வளவு முறையும் நீ செய். சீக்கிரத்தில் டயர்டாகிவிடுவாய். ஆனால் இதுதான் எளிய பெர்பெக்ட் எக்சர்சைஸ் என்று சொல்லிக்கொடுத்தார். அவர் பாடப் புத்தகத்திலிருந்து சொல்லிக்கொடுத்த பிற ஆயிரம் காரியங்களும் மறந்து போனாலும் ஆப்-டாபிக்காக சொன்ன இந்த ஒரு காரியம் மட்டும் இன்னும் மறந்து போகவில்லை.I love off-topics.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Friday, April 22, 2011
மெல்ல விடு
Posted by
PKP
at
4/22/2011 11:37:00 AM
Labels: Health
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஆப்-டாபிக்காக சொன்ன இந்த ஒரு காரியம் மட்டும் இன்னும் மறந்து போகவில்லை.//
Yes.ஆப்-டாபிக் Is very useful.
interesting ,,மூச்சு பயிற்சியை தான் தான் ஈசா யோகாவிலும் சொன்னார்கள் ...
மிகவும் பயனுள்ள தகவல்.நீண்ட காலம் வாழாவிட்டாலும் சுகதேகியாக வாழமுடியும் அல்லவா.அதைவிடப் பேறு ஏது.
தகவலுக்கு மிக்க நன்றி BOSS.
அருமையான தகவல்.உங்கள் ஆசிரியர் மிகப்பெரிய சுருக்கமாக புரிய வைத்துவிட்டார்
ஆம்! இதைத்தான் சந்த்யாவந்தனம் என்ற பெயரில் அந்தணர்கள் செய்கிறார்கள். (ஆனால் இப்போது அவர்களில் மிகச்சிலரே) எந்த பூஜையோ வைதிக காரியமோ, பத்து முறைகளுக்கு மேல் ப்ராணாயாமம் செய்ய வேண்டி வரும். அருமையான மூச்சுப் பயிற்சியை தினப்படி நடைமுறையாக்கி ஒரு ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டினார்கள். ஆனால் இன்று ப்ராணாயாமம் என்றால் மூக்கைத் தொட்டு, காதைத் தொடுவது என்ற அளவிலே வைத்திருக்கிறார்கள்.
ஆரோக்கியமான ஒரு பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே பணி தொடர என் வாழ்த்துக்கள்.
சித்த மருத்துவமும் இதையே வலியுறுத்துகின்றது ”வாசியோகம்” என்ற பெயரில்!
ஆகா .. இதுக்கு தான் ஈசா ல 2000 புடின்கிட்டாங்க
http://google.com/transliterate/indic/Tamil
blogs dont have maximum width for essay portions. it is tough to read essays directly in blogs. so, copy essays in blogs and paste it in above page. it has maximum width. u can read essays easily without need to scroll much....d...
Post a Comment