நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை.
இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும்.
ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான்.
நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும்.
சில அடிப்படைகள் இறைவனால் இயற்கையாக வகுக்கப்பட்டவைகள் மட்டுமே மாறாமல் இருக்கும் என்றைக்கும்.
இரண்டு கைகள் என படித்தல், அது காலத்தால் மாறத கல்வி. அது கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என படிக்க தொடங்கினால் என்றைக்கு முடியும்.
”21-ம் நூற்றாண்டின் எழுதப்படிக்க தெரியாதவர்கள், உண்மையிலேயே எழுதப்படிக்க தெரியாதவர்களல்ல. கற்க மறக்க மீண்டும் கற்க இயலாதவர்களே அவர்கள்” என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஆல்வின் டாப்லரின் கூற்று நினைவுக்கு வருகின்றது.
நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும்.
Follow me in Facebook
http://www.facebook.com/pkpblog
No comments:
Post a Comment