கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் நியூயார்க்கிலுள்ள ஒரு மருத்துவமனை (Vassar brothers medical center)சூப்பர்மார்க்கெட் சரக்கு போல வரும் நோயாளிகளுக்கு பார் கோடு (Bar code) போட தொடங்கியது.இதனால் மொத்த வேலையும் மிக எளிதாவதோடு மனித தவறுகளும் தவிர்க்கப்படுவதாக சொன்னார்கள்.மில்லியன் கணக்கில் டாலர்களும் மிச்சமாம்.
இப்போது ஐடி-காரர்கள் இன்னொரு டெக்னாலஜியோடு வந்திருகின்றார்கள்.
மனிதனுக்குள்ளே ஒரு சிலிகன் சிப்பை (Verichip அல்லது xmark) பொருத்திவிட்டு அவன் நடமாட்டத்தை கண்காணிக்க போகின்றார்களாம்.இரு அரிசி அளவே இருக்கும் இந்த சிப் மனிதனில் வலது கையில் நைசாக செருகப்படும். அப்புறமாய் அது செருகப்பட்டது சுத்தமாய் எவருக்கும் தெரியாது. அந்த சிப்பிலுள்ள 16 டிஜிட் எண்வழி அவன் கணிணியால் கண்காணிக்கப்படுவான் அடையாளம் காணப்படுவான். இதை radio-frequency identification (RFID) என்கின்றார்கள்.அப்புறமென்ன? மொத்த ஜாதகத்தையும் அது காட்டிவிடும்.
அமெரிக்க அண்ணாச்சிகள் Wal-Mart, Procter & Gamble, மற்றும் அரசு தபால் நிறுவனமான United States Postal Service போன்றவை இவற்றை தங்கள் பணியார்களிடையேஅமுல்படுத்த போவதாக பேசிக்கொள்கிறார்கள்.
"verichip inside"-னு இனி எல்லாரும் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிக்க வேண்டியது தான். கணிணியார் கண்ணிலிருந்து யாரும் தப்பமுடியாது போலும்.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Friday, August 10, 2007
மனிதனுக்குள் ஒரு சிப்
Thursday, August 09, 2007
ஆச்சீக்கு வழிகாட்டும் லேடி
இப்போதெல்லாம் காகித மேப்பு வழிகாட்டி புத்தகங்களின் விற்பனை அமெரிக்கா போன்ற நாடுகளில் படுக்க தொடங்கிவிட்டன. சிறிதாய் குட்டியோண்டு கலர் டிவிபோன்ற ஜீபிஎஸ் Global Positioning System (GPS) உபகரணம் காரில் பொருத்திக் கொண்டு ஆசைபடும் இடங்களுக்கெல்லாம் செல்கின்றார்கள். இனிய லேடி குரலொன்று போக வேண்டிய பாதைகளை வலதா இடதாவென எளிதாய் அவ்வப்போது ஓட்டுநருக்கு மேப்போட்டு சொல்லித் தருகின்றாள்.
அந்த காலத்தில் அமெரிக்கா பிறர் அசைவுகளை கண்டறிய தனது ராணுவத்துக்கு பயன்படுத்திய வசதி இப்போது பொது மக்கள் அளவுக்கு வந்துவிட்டது. இதற்காக உங்களுக்கு தேவையானது GPS ரிசீவர் எனும் பொட்டி. Garmin,TomTom போன்ற பிராண்டுகள் பிரபலம்.இப்போதைக்கு 250 டாலர் அளவில் கிடைக்கின்றது.மாத செலவெதுவும் இல்லை. Builtin GPS என்றால் கார் இன்சூரன்ஸ் எகிறும் என்கின்றார்கள். பல செல்போன்களும் இவ்வசதியோடு வருகின்றன.
வானில் இதற்காகவே பிரத்தியேகமாக 24 சேட்டிலைட்டுகள் சுற்றிகொண்டிருக்கின்றனவாம். அவசரத்துக்கு உதவ கூட மூன்று சேட்டிலைட்கள். இந்த 27 சேட்டிலைட்களும் செத்தால் மொத்த GPS வசதியும் செத்துவிடும். பூமியிலிருந்து 12,000 மைல்கள் தொலைவில் சூரியனிலிருந்து எடுக்கும் சோலர் ஆற்றலால் இடையறாது பூமியை இவை சுற்றி வருகின்றன. இவைகள் தான் இன்றைக்கு அமெரிக்காவில் மில்லியன் கணக்காணவர்களுக்கு ரோடுகளில் வழிக்காட்டி.
நான் எங்கே இருக்கிறேன்? பெங்களூரிலிருந்து 331 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து 444 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பதியிலிருந்து 152 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளேன் என சொன்னால் கண்டுபிடிக்க முடியாதாவென்ன? அது சென்னையாதான் இருக்கமுடியும் அல்லவா.அதைதான் ஜீபிஎஸ்-ம் செய்கின்றது. இதை Trilateration என்கின்றார்கள். அதாவது GPS வேலைசெய்ய அதுவால் குறைந்தது 3 சேட்டிலைட்டுகளிடம் பேச இயலவேண்டும்.High-frequency, Low-power radio signals இதற்காக பயன்படுத்தப்படுவதால் கட்டிடங்களிடையே சென்றால் வானிலை மோசமானால் வசமாய் மாட்டிக்கொள்வீர்கள்.அந்த லேடியால் உங்களுக்கு உதவமுடியாது.
மற்றபடி தனியே ஜாலியாக எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். கூகிள் மேப்பில் டைரக்சன் போட்டு பிரிண்ட் அவுட் எடுக்க தேவையில்லை.
நியூஜெர்ஸியில் நான்வெஜ் வெட்ட ஆச்சீஸ் செட்டிநாட்டுக்கு செல்ல கூட அவள் வழி சொல்வாள்.
Wednesday, August 08, 2007
தமிழ் எழுத்துரு தொல்லைகள்
சமீபத்தில் நண்பர்களிடமிருந்து வந்த சில மெயில்கள் கவலையுற வைத்தது. தமிழ் யூனிக்கோடானது சிலருக்கு இன்னும் ஒழுங்காக வேலைசெய்வது போல் தெரியவில்லை.
Firefox 2.0.0.6 கூட Intenet Explorer 6 மற்றும் Intenet Explorer 7 பயன்படுத்துகின்றேன். இவ்வலை பதிவைபடிப்பதில் சிக்கல் எதுவும் வந்ததில்லை.
ஒரு நண்பர் இவ்வாறு சொல்கின்றார்
Tamil Fonts in Unicode appear funny in these pages!
When Ka is to become Ke the additional script has to appear before the main type and not after.
Any scope for making amends? Or is it a problem of the Key board operator - data inputting?
இன்னொரு நண்பர் இவ்வாறு சொல்கின்றார்
Hi.
I had mailed you a while back about the problem of seeing the font properly in Firefox. Can see in IE, but not on Firefox. difference seems to be that IE has a provision for left-to-right and right-to-left fonts, and it automatically chooses the first. No such provision in firefox, and the matras are all in reverse order. (For font selection, I have used Unicode -8).
Any suggestions? I hate IE, and do not want to use it for this alone...
regards
எங்கு தவறுகின்றதென புரியவில்லை.பிரின்ட் ஸ்கிரீன் கொடுத்தால் முயன்று பார்க்கலாம். அனுபவபட்டோர் டிப்ஸ் இருந்தால் சொல்லலாம்.
Posted by
PKP
at
8/08/2007 10:31:00 AM
6
comments
Labels: Tamil
Friday, August 03, 2007
இலவசமாய் மவுஸ் ஓட்டங்களை படமாக்கலாம்
கணிணியில் நீங்கள் செய்யும் செயல்களை பதிவுசெய்து இன்னொருவருக்கு வீடியோவாக அனுப்ப வசதியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என சில சமயங்களில் தோன்றும். சில கணிணிசார் பணிகளை பிறருக்கு சொல்லி விளக்குவதை விடவும் இது போன்ற வீடியோக்களை உருவாக்கி அனுப்பினால் அது உங்கள் மவுஸ் அசைவுகள், திறக்கும் விண்டோஸ்கள், கீபோர்டு டைப்பிடுதல்கள் எல்லாவற்றையும் படிப்படியாக காட்டிவிடும். இதனால் சாமானியர்களுக்கும் கணிணிசார் பணிகள் ரொம்பவும் எளிதாகிவிடும். கூடவே உங்கள் குரலையும் மைக்ரோபோன் வழி பதிவு செய்து கலக்கலாம். இவையெல்லாம் இலவசமாக செய்ய அருமையான மென்பொருள்கள் உள்ளன. ஒன்று wink. இன்னொன்று screen2exe.
இரண்டாவதான இந்த screen2exe மென்பொருளானது நேரடியாக exe யாக வீடியோவை கொடுப்பதால் வீடியோபிளயர் கூட உங்களுக்கு தேவைப்படாது.
Wink Homepage
http://www.debugmode.com/wink/
Screen2exe Homepage
http://www.screen-record.com/screen2exe.htm
Screen2exe Direct Download Link
http://www.screen-record.com/dl/SCREXESetup.exe
Free Tools to convert screen sessions as videos.
சமீபத்தில் வலையத்தில் உலாவந்த போது தமிழ் MP3 களுக்கான ஒரு தளம் கண்ணில் அகப்பட்டது. இங்கே பகிர்ந்து கொள்கின்றேன். நண்பர்களுக்கு உதவலாம்.
http://www.tamilcowboy.com/page.php?2
Posted by
PKP
at
8/03/2007 11:54:00 AM
1
comments
Labels: Freewares
Wednesday, August 01, 2007
போட்டோக்களுக்கு உயிகொடுக்கும் Photosynth
இந்த கலியுகத்தில் அஃறிணை பொருட்களும் உயிர் கொள்கின்றன. கைக்கு எட்டும் பொருட்களெல்லாம் நாளுக்கு நாள் ஸ்மார்ட் ஆகிக் கொண்டேயிருக்கின்றன.இதற்கு இன்றைய கணிணி/இணைய உலக போட்டோக்களும் விதி விலக்கில்லையாம். நாளை ஒரு நாள் "அறிவாலயம்" என்று டைப்பினால் அது சகல அறிவாலம் சம்பந்தப்பட்ட அனைத்து போட்டோக்களையும் ஒன்றாய் திரட்டிக் கொண்டு வந்து ஒருங்கிணைத்து 3டியாய் (முப்பரிமாணத்தில்) அந்த கட்டிடத்தை அழகாய் காட்டி விடுமாம். சமீபத்தில் வாங்கப்பட்ட Seadragon-னின் நவீன டெக்னாலஜியால் அந்த படங்கள் மெகாபிக்ஸனாலானாலும் சரி இல்லை கிகாபிக்ஸனாலானாலும் சரி உச்ச தரத்தில் கிளிக்கி கிளிக்கி ஸூம் பண்ணிக்கொண்டே போகலாமாம். போய் போய் சன் ஸ்டுடியோ இன்னும் அங்கிருக்கிறதாவென பார்க்கலாம். கல்வெட்டு வரிகளை தெளிவாய் படிக்கலாம் என்கின்றார்கள். இதெல்லாம் மைக்ரோசாப்டின் புதிய Photosynth நுட்பம் மூலம் சாத்தியமாகும். கீழ்க்கண்ட வீடியோவை கிளிக்கி பாருங்கள் இன்னும் தெளிவாய் புரியும்.
Photosynth மென்பொருள் இன்னும் Microsoft Live Labs-ல் பீட்டா வடிவில் உள்ளது. நீங்களும் முயன்று பார்க்கலாம்.
Product Home Page
http://labs.live.com/photosynth/