உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, November 25, 2008

ஒன்றக்க ரண்டாக்க

வாங்கும் போது 160Gig ஹார்டிரைவ் உள்ள மடிக்கணினி என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள். வாங்கி விண்டோசில் நுழைந்து பார்த்தால் அது 149Gig ஹார்டிரைவ் என்று காட்டியது.மிச்ச 11Gig எங்கே போனது? எல்லாம் மார்க்கெட்டிங் உத்தி தான். டெக்னிக்கலி 1MB=1,048,576 bytes. ஆனால் இந்த வியாபார பயில்வான்கள் அந்த கணக்கை 1MB=1,000,000 bytes என மாற்றி விட்டார்கள். இப்படித்தான் அந்த 11Gig காணாமல் போனது. 11Gig-க்கான காசு மட்டும் லபக்.

மொத்த 160Gig-கையும் C-டிரைவாக ஒரே பார்டிசியனில் போட்டு இருந்தார்கள். விலைமதிப்பற்ற படங்களையும் வீடியோக்களையும் இன்னொரு டிரைவில் போட்டு வைப்பது தான் உத்தமம் என்று நினைத்த கோபால் அந்த 160Gig-கையும் C மற்றும் D டிரைவாக பிளந்து கேட்டான். ஃபார்மேட் செய்யாமல், விண்டோசை திரும்ப நிறுவாமல், கோப்புகள் எதையும் இழக்காமல் அப்படியே கேக் வெட்டுவதுபோல ஒரு பார்டிசியனை இரண்டாக வெட்ட முன்பு Norton PartitionMagic-கை பயன்படுத்தியதுண்டு. இப்போது அதற்கு விலைகுறித்து விட்டதால் இலவச மென்பொருளான EASEUS Partition Manager Home Edition -ஐ பயன்படுத்தினோம். இது கொண்டு எளிதாக எல்லாவிதமான Partitioning வேலைகளையும் செய்யமுடிகின்றது. என்னோட ஃபேவரைட்டான Hide Partition கூட இதன் மூலம் செய்யலாம். கணிணி பார்டிசியன் ஒன்றை இரண்டாக்க விஸ்டாவின் Disk Management-ல் Shrink என்று ஒரு வசதி இருக்கின்றதாம். பெரும் தலைவலி என கேள்விப்பட்டேன்.

EASEUS Partition Manager Download Page
http://www.partition-tool.com/download.htm

Direct Download Link
http://www.easeus-software.com/download/epm.exe

இன்னொறு Partition Manager 9.0 Express
http://www.paragon-software.com/home/pm-express/download.html

லினக்சில் இதுமாதிரியான வேலைகளை செய்ய GParted அதாவது Gnome Partition Editor பயன்படுத்தலாம்.
http://gparted.sourceforge.net/



மனிதனின் மனசாட்சி
தெய்வத்தின் குரல்
-பைரன்

ரமணிச்சந்திரன் புதினம் "லாவண்யா" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ramanichandran Laavanyaa Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Saturday, November 22, 2008

அபிமான ஐபோன் பயன்பாடுகள்

ஐபோன்களின் ஊடுருவல் இந்தியாவில் கம்மி என கேள்விப் பட்டேன். ஆனால் இங்கு அது ஒரு "ஸ்டேன்டர்டு" போலாகிவிட்டது. வேலை இடத்திலும் சரி விமானப் பயணத்திலும் சரி அக்கம் பக்கம் எதிரே தூரே எல்லாம் ஐபோன் தான் தெரிகின்றது.அதிலும் அவ்வப்போது வெளியாகும் சில சூடான இலவச ஐபோன் பயன்பாடுகள் ஐபோன் பயனாளர்களை பரவசப்படுத்தி விடுவதுண்டு. Google mobile app சமீபத்திய உதாரணம் .கூகிளில் தேட வார்த்தைகளை நாம் டைப்ப வேண்டியதில்லை. வாயால் நாம் சொன்னாலே போதும்.அது நம் குரலை கேட்டு நமக்காக டைப்பிவிடுகின்றது.மேலும் சில உதாரணங்களை இங்கே கொடுத்துள்ளேன்.புதிதாக வந்திருக்கும் BlackBerry Storm டச் ஸ்கிரீனோடு வந்திருக்கின்றது.நல்ல போட்டியாக தெரிகின்றது.ஆனாலும் இது மாதிரியான பல நல்ல சுவாரஸ்யமான பயன்பாடுகளை அதில் நிறுவமுடியுமாவென தெரியவில்லை.

  • NYtimes மூலம் சுட சுட நியூயார்க் டைம்ஸ் படிக்க முடிகின்றது.
  • Stitcher மூலம் பிபிசி முதலான ரேடியோ பாட்காஸ்ட்களை எப்போவேண்டுமானாலும் கேட்க முடிகின்றது.
  • Coolris மூலம் இணையத்திலிருக்கும் படங்களை யூடியூப் வீடியோக்களை 3டி எபக்டில் திகட்ட திகட்ட முழு ஸ்கிரீனில் பார்க்கமுடிகின்றது.
  • NetNewswire மூலம் பல செய்தி ஓடைகளை(RSS) படிக்க உதவுகின்றது.
  • Dictionaire மூலம் தெரியாத பல வார்த்தைகளுக்கு அர்த்தம் காண முடிகின்றது.
  • Units மூலம் தெரியாத பல அளவீடுகளை தெரிந்த அளவுகளாக மாற்ற முடிகின்றது.
  • Wikipanion மூலம் விக்கிபீடியாவை எளிதாக படிக்க முடிகின்றது.
  • Airsharing மூலம் கணிணியிலிருக்கும் கோப்புகளை ஐபோனுக்கு கொண்டுவர முடிகின்றது.
  • Box.net மூலம் இணையத்தில் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை பார்வையிட முடிகின்றது.
  • Fring மூலம் இலவச அல்லது குறைந்த விலையில் சர்வதேச போன்கால்கள் செய்ய முடிகின்றது.
  • Flashlight மூலம் இருட்டில் வெளிச்சம் கிடைக்கின்றது.
  • Voicenotes மூலம் நம் குரலை எளிதாக பதிவு செய்ய முடிகின்றது.
  • Google mobile app-பிடம் சொன்னாலே போதும்.அது தேடி தருகின்றது.
  • Google earth ஒரு அமேசிங் எக்ஸ்பீரியன்ஸ்.Google Map-ல் இப்போது Streetview-ம் தெரிகின்றது.
  • புதிதாக வந்திருக்கும் The weather Channel தி அல்டிமேட்.




ஒரே சமயத்தில் இரண்டு
வேலை செய்ய
நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில்
ஒரே ஒரு வேலை
செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

சுஜாதா "டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு" மேடைநாடகம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Sujatha Dr.Narendiranin Vinotha Vazakku Stage Drama in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Wednesday, November 19, 2008

TNO

இணையம் மற்றும் கணிணியை வெகுவாகப் பயன்படுத்தும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு மந்திரம் TNO அதாவது Trust no one. சினிமா பார்த்தல், ரம்மி போடுதல், கார் ரேஸ் ஓட்டுதல் இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு மிகவும் சென்சிட்டிவான விஷயங்களையும் கணிணியில் கையாளத் தொடங்கியுள்ளோம். ஒரே கிளிக்கில் ஆயிரமாயிரம் டாலர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றமுடிகின்றது. சாதாரண பேட்டரி சார்ஜர் முதல் ஆப்பிள் நிறுவன ஸ்டாக்குகளை வரை வாங்க, விற்க ஆன்லைனை நாடுகின்றோம். இத்தகைய தருணத்தில் நாம் கணிணியில் செய்யும் ஒவ்வொரு கிளிக்கையும் மிகக் கவனமாகக் கிளிக்கவேண்டியுள்ளது. அது போலத்தான் நாம் போகும் தளங்கள், நாம் நிறுவும் மென்பொருள்கள், இணைய உலகில் நாம் பழகும் நண்பர்கள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிஜ உலகுக்கும் ஆன்லைன் உலகுக்கும் ரொம்ப ஒன்றும் வித்தியாசமில்லை. மதுரை நகரப் பேருந்தில் ஜேப்படிகளுக்கு எத்தனை உசாராய் இருப்போமோ அதே போலத்தான் ஆர்குட்டிலும் உஷாராய் இருத்தல் வேண்டும். வழியில் ஹாய் சொன்ன ஒரு மர்ம நபரிடம் எப்படி உங்கள் வீட்டு விலாசத்தை கொடுக்க மாட்டீர்களோ அது போலத்தான் போகும் தளமெல்லாம் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்களையும் இட்டுச்செல்லல் அத்தனை நல்ல பழக்கமன்று.

TNO-க்கு வருவோம். மைக்ரோசாப்டின் விண்டோஸ் செர்வர் செயலியை ஐரோப்பிய நாடுகளின் அதிமுக்கிய ரகசிய கணிணிகளில் பயன்படுத்த மாட்டார்கள். அது போலத்தான் சில அரபுநாடுகளும். முற்றிலும் மூடப்பட்ட நிரல் மூலம் கொண்ட ஒரு செயலிக்குள் அதாவது விண்டோசுக்குள் எதாவது ஒரு ரகசிய சுரங்கப்பாதை அமெரிக்காவுக்கு இருக்குமோ என்ற கவலைதான் அதற்கு காரணம். பாருங்கள் உலகின் நம்பர் ஒன் மைக்ரோசாப்டை கூட அவர்கள் நம்புவதில்லை. திறந்த நிரல் மூலம் கொண்ட லினக்ஸ் தான் அவர்கள் தெரிவு. Trust no one. கலியுகத்தில் யாரையும் நம்பக்கூடாதாம்.

பல்வேறு பேங்க் அக்கவுண்டு கணக்குகளையும் ஒரே திரையில் இழுத்து வந்து காட்ட பல மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கின்றன.யாரையும் நம்பியதில்லை.உங்கள் பாஸ்வேர்டுகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைக்கவென தனியாக வரும் குட்டியூண்டு புரோகிராம்களையும் நான் நம்புகிறதில்லை. நமது பாஸ்வேர்டுகளை அது அதை டெவலப்செய்தவர்களுக்கு ஈமெயில் செய்துகொண்டிருக்கலாம் யாருக்கு தெரியும்? அமேசான் S3-யிலோ அல்லது JungleDisk-கிலோ நீங்கள் அப்லோடு செய்துவைத்திருக்கும் உங்கள் ரகசிய கோப்புகள் உண்மையிலேயே அவை யாரும் ஆக்செஸ் செய்யமுடியாத அளவுக்கு பாதுகாப்பானவையா?. உறுதியாகச் சொல்லமுடியாதே. Again Trust no one.

கடந்த பதிவில் ஜிமெயில் பேக்கப் மென்பொருள் பற்றி எழுதியிருந்தேன். அதிலும் உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்கொடுத்தால்தான் அதுவால் உங்கள் ஜிமெயிலை பேக்கப்செய்ய இயலும்.ஆனால் அது விசுவாசமாய் அதை உருவாக்கிய டெவலப்பருக்கே உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுசொல்லை கொண்டுபோய் கொடுக்குமாவென்றால் தெரியாது. அது ஓப்பன் சோர்ஸ் இல்லாததால் அதை கணிப்பது மிகவும் கடினம். நமது நண்பர் "மாஸ்டர்" சுட்டிகாட்டியதால் இங்கு இதை தெரிவித்தேன்.அவர் போன்ற நாலும்தெரிந்த நண்பர்கள் இவ்வலைப்பூவுக்கு வந்து செலல், தங்கள் கருத்துக்களை சொலல் எனக்கெல்லாம் மிகவும் பெருமை. எளிதாய் இருக்கின்றதேவென்றுதான் அம்மென்பொருளை முன்கொணர்ந்தேன். ஒரு எச்சரிக்கையையும் செய்திருக்கலாம்.

Trust no one என நாமெல்லாரும் கெம்பீரமாய்ச் சொன்னாலும் சில விசயங்களில் நாம் சிலரை அல்லது சிலவற்றை நம்பித்தான் ஆகவேண்டியிருக்கின்றது. வாழ்க்கையே நம்பிக்கையில் தானே ஓடுகின்றது. கவிஞர் வைரமுத்துவின் "நம்பிக்கை" சின்னத்திரைப்பாடல் என்னோட ஃபேவரைட்.


நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை
-கவிஞர் வைரமுத்து

விடுதலை க.இராசேந்திரன் "ஈழப்பிரச்சனையில்" மென்புத்தகம் இங்கே தமிழில்.Viduthalai Ka.Rajeendran Eela Pirachanaiyil in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, November 17, 2008

ஜிமெயில் பேக்-அப்

இணையத்தில் காணக்கிடைக்கும் பல இலவச மெயில் சேவைகளில் "ஜிமெயில்" இன்றைக்கு நம்மில் பலருக்கும் பிரதான மெயிலாசனமாகிவிட்டது. ஒரே பயனர் கணக்கில் மெயில் அக்கவுண்ட், ஐகூகிள், பிக்காசா, அட்சென்ஸ், ஆர்குட் என்று பலவசதிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது அதற்கான இன்னொரு காரணம்.அப்படியே மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைடிரைவ்(5 GB) போல கூகிளும் சீக்கிரம் ஜிடிரைவ் வழங்கினால் நன்னா இருக்கும்.

உங்கள் ஜிமெயிலிலிருக்கும் மின்னஞ்சல்களையெல்லாம் இறக்கம் செய்து உங்கள் கணிணியின் ஹார்ட் டிரைவில் பாதுகாப்பாக சேமித்துவைத்துக்கொள்ள வேண்டுமா?
பின்பு நேரம்கிடைக்கும் போதெல்லாம் இணைய இணைப்பில்லாத போதும் அம்மெயில்களை அட்டாச்மெண்ட்களோடு திறந்து படிக்கவேண்டுமா? பழையதொரு ஜிமெயில் அக்கவுண்டிலிருக்கும் உங்கள் மின்னஞ்சல்களையெல்லாம் புதியதொரு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுக்கு மாற்றவேண்டுமா? இரு வேறு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை ஒன்றிணைக்க வேண்டுமா?

எளிய இலவச Gmail-Backup டூல் மேற்கண்ட சூழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்கு செய்கின்றது. ஒரே கண்டிசன். உங்கள் ஜிமெயிலில் IMAP-ஆனது enable செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்டோசில் மட்டுமல்லாது லினக்சிலும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேசம்.

Download from here

http://www.gmail-backup.com




எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
-எட்மண்ட் பர்சி

எழிலன் "இருவரி முத்துக்கள்" கவிதைகள் நூல் பகுதி1 இங்கே தமிழில் மென் புத்தகமாக. Ezhilan Iruvari Muthukal Part1 kavithaikal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, November 14, 2008

மேற்கே உதிக்கும் சூரியன்

இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் படி இந்த யுகத்தின் முடிவு நாள் நெருங்குவதை "மேற்கே உதிக்கும் சூரியனை" அடையாளமாக வைத்து கண்டுகொள்ளலாம் என்பார்கள். "மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள்." என்று ஒரு வாக்கியம் இருக்கின்றது. இப்படி எழுத்தின்படியேயாக நிஜ சூரியன் மேற்கே இருந்து உதித்து வருவது என்பது சாத்தியமா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவ்வாறாக சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழலும் திசையை மாற்றி எதிர்புறமாக சுற்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகமிகக் குறைவு. அதுவே இன்னொரு யூகத்தின் படி அது தன் புலத்தை தலைகீழாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக நம்பப்படுகின்றது. இதனால் வட தென் துருவங்கள் இடம்மாறி சூரியன் நமக்கு மேற்கே உதிப்பதாய் தோன்றும் எனவும் சிலர் கருத்து கூறுகின்றனர். ஒரு சில ஆய்வுகள் பூமியின் வட்டப்பாதையை கூர்ந்து நோக்கும் போது இச் சம்பவம் 2012 முதல் 2016 க்குள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன.ஒரு காந்தத்தின் எதிர்புலத்தைக் கண்ட இன்னொரு காந்தத்தின் எதிர்புலமானது வெட்கப்பட்டு சுழன்று நகர்வது போல ஒரு மென்மையான தலைகீழ் சுழற்சியாய் இது இருக்கும் என நம்பப்படுகின்றது. இதையேத் தான் நாஸ்ரடாமஸ் தாத்தா "Great shift on Earth"என சொல்கின்றாராம்.

இது இப்படியிருக்க இஸ்லாமிய வேர்களைக்கொண்ட ஒரு எளிய மனிதர் மேற்கே பலம்பொருந்திய நாடு ஒன்றுக்கு அதிபராகும் வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருகின்றது. மேற்கே இப்படியான ஒரு நபர் உதிக்கப்போவதைத்தான் அவ்வாக்கியம் குறிக்கின்றது என இன்னொரு சாரார் இதற்கு விளக்கம் கொடுக்க முயல்கின்றார்கள். அதாவது அந்த தீர்க்கதரிசனம் லிட்டரலாக நிறைவேறாமல் இது போன்ற ஒரு அரசியல் சம்பவமாகக் கூட அது நிறைவேறலாம் என்பது அவர்கள் வியாக்கியானம். போதாக்குறைக்கு அவரின் சின்னமும் Rising Sun-னாக இருப்பது சரியான கோயின்சிடன்ஸ்.

தினமும் நடக்கும் அசாதாரண செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும் போதும் இன்றைய உலக சூழலில் ஒரு Great shift அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உலகுக்கு அவசியம் என்றே தோன்றுகின்றது.ஆனால் அதற்காக பூமியே தன் திசைகளை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியாது.

அதுவெல்லாம் இருக்கட்டும்.அப்படியானால் அந்த மனிதனைப்போலவே பேசும் அதிசயப் பிராணி ஒன்றும் உலகத்தில் தோன்றும் எனவும் சொல்லப்பட்டுள்ளதே என கேட்கின்றீர்களா? அது தான் மனிதனைப்போலவே பேச ரோபாட்டுகள் வந்துவிட்டனவே.



மரியாதைக்கு விலை கிடையாது.
ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்
-மாண்டேகு

இராமலிங்க அடிகள் வரலாறு இங்கே தமிழில் மென் புத்தகமாக. History of Thiru Arutprakaasa Vallalar in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்