On Arrival-ல் முழுமையான செக்யூரிட்டி செக்கப் இருக்கும்.ஆனால் பயப்படும் படியாய் எதுவும் இல்லை.(துரதிஷ்டமாய் சில வி.ஐ.பி-கள் மாட்டிக்கொள்வது உண்டு).முக்கியமாய் மசாலா உணவு பதார்த்தங்கள்,ஊறுகாய்,பழங்கள் லக்கேஜில் வைக்காமல் செல்லுதல் நலம்.எல்லா இந்திய,தமிழக ஐட்டமும் அங்கே கிடைக்கிறது (சில குறிப்பிட்ட State-களில்).H1B -ல் வந்தால் மறக்காமல் ஒரிஜினல் form I 797 (Approval notice) மற்றும் ஒரிஜினல் Appointment order வைத்திருங்கள்.விமானத்தில் fillup பண்ணின I94-ஐயும் கொடுக்க வேண்டும்.
I94-ன் மறுபாதி உங்கள் கைக்கு கிடைக்கும்.உங்கள் வருகை குறித்த சில கேள்விகள் கூட கேட்கபடலாம்.I94-ல் நீங்கள் எவ்வளவுகால்ம் அமெரிக்காவில் இருக்கலாம் என்பது குறிப்பிடபட்டிருக்கும்.இந்த I94 மிக முக்கியமான தாள்.நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.லேமினேட் பண்ணகூடாது.அங்கே அமெரிக்காவில் SSN ஆகட்டும்,இல்லை Green Card ஆகட்டும்,இல்லை Auto Registration card ஆகட்டும் எதையும் லேமினேட் செய்ய கூடாது.காப்பியும் எடுக்ககூடாது.(எடுத்தால் வீட்டில் உங்கள் reference-க்காக வைத்துக்கொள்ளலாம்.Never show that to a officer.)விமான நிலையத்தில் சொந்தங்களோ இல்லை நண்பர்களோ அங்கே காத்திருக்கலாம்.இல்லை,இருக்கவே இருக்கிறது வாடகை கார்கள்.முன்பதிவுக்கு http://www.limousines.com/ or http://www.limos.com/ தளங்களை முயற்ச்சிக்கலாம்.
எதற்க்கும் maps.google.com or maps.yahoo.com or www.mapquest.com தளங்களில் இருந்து airport to home directions எடுத்து வைத்துக்கொள்ளுதல் புத்திசாலித்தனம்.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Sunday, February 26, 2006
அமெரிக்கா போறீங்களா? - டிப்ஸ் 7
Posted by
PKP
at
2/26/2006 10:52:00 PM
Labels: America
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment