100 மெக் (100MB) அளவிலான வீடியோ கோப்பு ஒன்றை நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் வழி அனுப்ப விழைகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் இப்போதைக்கு சத்தியமாய் அக்கோப்பின் அளவு மிகப்பெரிது. ஜிமெயில் போன்ற இலவச மின்னஞ்சல் கொடுப்போர் கூடிப்போனால் 20 மெக் (20MB) அளவிலான கோப்புகளை மின்னஞ்சல் வழி அனுப்ப அனுமதிப்பர். அதற்கும் மேல் போனால் அழகாய் "சாரி" சொல்லிவிடுவர்.
இது போன்ற சந்தர்பங்களில் கை கொடுப்பவை தான் கோப்பு பிரிப்பான்கள், சேர்ப்பான்கள். இதன் மூலம் அந்த 100மெக் கோப்பை நீங்கள் 20மெக் அளவினதாய் ஐந்து துண்டு துண்டாக்கி (Split) தனித் தனி மின்னஞ்சல்களில் நண்பருக்கு அனுப்பலாம். மறுமுனையில் நண்பர் அந்த ஐந்து மின்னஞ்சல் அட்டாச்மெண்ட்களையும் இறக்கம் செய்து கோப்பு சேர்ப்பான் மூலம் எளிதாய் ஒன்றாய் இணைத்துக்கொள்வார் (Join). அவ்ளோதான். 100 மெக் வீடியோ துண்டு மறுமுனை போய் சேர்ந்தாயிற்று.
இது போல் கோப்புகளை பிரிக்க சேர்க்க இரண்டு பிரபல இலவச மென்பொருள்கள் உள்ளன.
ஒன்று HJSplit
Download here
இன்னொன்று The File Splitter
Download here
இப்படி பிரிப்பதும் சேர்ப்பதும் இங்கு இத்தனை எளிது. மனிதர்களிடையே தான் ரொம்ப கஷ்டம் டோய்.
சுஜாதாவின் "மெரினா" குறுநாவல் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Sujatha Merina Novel Story in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Thanks Tamilnenjam.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Tuesday, February 19, 2008
பிரிப்போம், சேர்ப்போம்
Posted by
PKP
at
2/19/2008 09:53:00 AM
Labels: Freewares
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அருமையான தகவல். ரொம்ப நாட்களாக இது போன்ற ஆக்கபூர்வமான பதிவுகளைப் படிக்கக் கிடைக்காமல் ஏங்கியிருந்தேன். இப்பொது அந்த ஏக்கம் தீர்ந்தது.
புதிய செய்திகளை அறியத்தரும் எங்கள் தங்கம் - இணையத்தளபதி - பிகேபி அவர்களுக்கு நன்றிகள்.
மனிதர்களிடையே தான் ரொம்ப கஷ்டம்
அது சரி தான்.
வைரசு இருக்கா? இல்லையா?
http://tamizh2000.blogspot.com/2008/02/blog-post_668.html
வித்தியாசமான இசையில் வெளிவந்துள்ள 'டென்மார்க் பாய்ஸ்' இசையால்பம் உங்களின் இணையிறக்கத்துக்காக இங்கே காத்துக்கொண்டு இருக்கும்போது வேறென்ன செய்கிறீர்கள்?
http://66.90.103.126/~rose4you/www.rose4you.dk/index.php?dir=01.%20Tamil/Special%20Albums/Denmark%20Tamil%20Boys/
தொடர்ந்து இதுப்போன்று ஔஅருமையான தகவல்களை வழங்கி கொண்டியிருக்கும் தாங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இதுப்போன்று ஒரு VIDEO file-லிருந்து தேவையான பகுதி மட்டும் வெட்டி எடுக்க, மற்றும் வெட்டி எடுத்து பகுதிகளையெல்லாம் ஒரு கோப்பாக செய்ய Video cutter or VCD CUTTER செயலிய பற்றி அறிய தாருங்களேன்.
அன்புடன்
இஸ்மாயில் கனி
கும்பகோணம்
(தற்சமயம் செளதியில்)
சும்மா இருக்கேன்.. ஆனால் சும்மா இல்லை
http://tamizh2000.blogspot.com/2008/02/blog-post_21.html
PKP Sir,
பிரிச்சாச்சு. பிரிச்ச கோப்பை அனுப்பும்போது மறுமுனையில் ஒட்டத் தேவையான .exe கோப்பை mail clients like gmail, hotmail, rediff, yahoo நாலுமே மறுக்கின்றனவே? என்ன வழி? ஒட்டுவான் இல்லாமல் எப்படி வெட்டிய கோப்புகள் இணையும்?
Post a Comment