உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Wednesday, February 16, 2011

வாமுக:மானிட்டர்கள்

"வாங்கும் முன் க‌வ‌னிக்க‌" வ‌ரிசையில் இந்த முறை மானிட்டர்கள் எனப்படும் கணினிகளின் திரைகள் பற்றி பார்க்கலாம். மடிக்கணிணிகளே மிகுதியாகிப்போன இன்றைய சூழலில் கணித்திரைகள் தேவையில்லையே எனினும், சில பல காரணங்களுக்காக கணிணி மானிட்டர்கள் உங்களுக்குத் தேவைப்படலாம். குறிப்பாகச் சொல்லப்போனால் சாதாரண மடிக்கணிணியின் சிறிய திரை அளவு மற்றும் சிறிய எழுத்துரு அளவுகள் உங்கள் கண்பார்வைக்கு வசதியாக இல்லாத போது ஒரு பெரிய மானிட்டர் வாங்குவதை குறித்து யோசிக்கலாம். அல்லது வொர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்கள் மடிக்கணிணி திரை மட்டுமல்லாமல் இன்னொரு ஸ்கீரீன் கூட (Dual screen) இருந்தால் வேலை செய்ய இன்னும் எளிதாக இருக்குமே என எண்ணினால் நீங்கள் கூடுதலாக ஒரு மானிட்டர் வாங்குவதை குறித்து யோசிக்கலாம். அப்போது நினைவில் வைக்க வேண்டிய சில குறிப்புகள்.

1.திரை அளவு:
பல்வேறு Screen Size-களில் வரும் கணித்திரைகள் இஞ்சு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. 21” முதல் 23” அளவு வரையான மானிட்டர்கள் பிரபலம். இந்த இஞ்ச் அளவுகள் டயகணல் அளவுகளாகும். அதாவது வலது மேல் மூலையிலிருந்து இடது கீழ் மூலைவரையான இஞ்ச் அளவாகும் (படம்). விலையில் உங்களுக்கு தகுதியானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

2.திரைத் தரம்:
பெரும்பாலும் LCD மானிட்டர்கள் தான் மார்கெட்டில் உள்ளன.VN,TN,IPS போன்ற LCD நுட்பங்கள் உள்ளன. இதில் In-Plane Switching எனப்படும் IPS பேனல்கள் பெட்டர்.அவை LED Backlight ஆக இருந்தால் இன்னும் உச்சிதம். Dead pixels எதுவும் இல்லாமல் இருந்தால் அது நம் அதிஷ்டம். HD எனப்படும் High Definition அளவில் 1080p இன்றைய சராசரி உச்சம். ரெசல்யூசனுக்கு 1920x1080 அளவை உச்சமாக கொள்ளலாம். அகல திரையாக அதாவது wide screen-னாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3.போர்ட்டுகள்:
ஒன்றுக்கும் மேல் HDMI போர்ட்கள் இருப்பது மிகவும் நல்லது.ஒரு வேளை உங்கள் கணிணி கொஞ்சம் பழையதுவெனில் VGA போர்ட்டை பயன் படுத்துவீர்கள்.

4.ஸ்பீக்கர் மற்றும் டிவி டியூனர்:
பெரும்பாலான மானிட்டர்கள் தன்னுடன் ஸ்பீக்கருடன் வருவதில்லை. சில மானிட்டர்கள் ஸ்பீக்கர்களை இணைக்க வழி கொண்டிருக்கும். அப்படியெனில் ஒலியையும் ஒளியையும் ஒரே வயரில் கடத்தும் HDMI போர்ட் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் மானிட்டரை டிவியாகவும் பயன்படுத்த யோசனை இருந்தால் டிவி டியூனர் உள்ள மானிட்டராக வாங்கவும். கொஞ்சம் விலை அதிகமாயிருக்கும்.

5.இன்னும் பிற:

மானிட்டரின் ஸ்டைல், எடை மற்றும் கனத்தை கூட சிலர் கருத்தில் கொள்ளவேண்டி வரும்.கேமிங்குக்காக நீங்கள் இந்த மானிட்டரை பயன்படுத்துவதாக இருந்தால் Response Time 2ms ஆக இருப்பது நல்லது. மானிட்டரின் ஸ்டாண்ட் மற்றும் அதை திருப்பும், உயர்த்தும் வசதிகளும் உங்களுக்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுவது நல்லது.

பிகு:
LCD திரைகளின் Stuck மற்றும் Dead pixels-களையும் பிளாஸ்மா திரையின் screen burn-in-களையும் JScreenFix தீர்ப்பதாக கேள்வி. தேவைப்படுவோர் முயன்று பார்க்கலாம்.

மாங்கல்ய தத்துவம்:
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யம் ஒன்பது இழைகளால் ஆனது. இதன் இழைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தத்துவம் உள்ளது. 1.வாழ்க்கையை புரிந்துகொள் 2.வாழ்க்கையில் மேன்மை 3.ஆற்றல் 4.தூய்மை 5.தெய்வ பக்தி 6.உத்தம நிலை 7.விவேகம் 8.தன்னடக்கம் 9.தொண்டு செய்தல்


Email PostDownload this post as PDF

Related Posts by Categories5 comments:

மாணவன் said...

வழக்கம்போலவே பயனுள்ள தகவல்களுடன் அசத்தலான பதிவு

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்கய்யா

:)

Speed Master said...

பயனுள்ள பதிவு நன்றி

www.sureshbabuvinitulaa.blogspot.com said...

ஐயா உங்களது சேவை எங்களுக்கு தேவை. கணணி வாங்க இருப்பவர்களை மனதில் கொண்டு நீங்கள் எழுதி வரும் வா.மு.க மிக அருமை .அடிக்கடி காணாமல் போகாதீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

mohan said...

வணக்கம் சார், இத்தனை option களும் , எந்த company monitor களிலுள்ளது என்று கூறியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Jayadev Das said...

உங்க பதிவு சரியான சமயத்துல கிடைச்சிருக்கு! எனக்கு வாங்கிய பின் பிரச்சினை. நான் மூணு வருஷத்துக்கு முன் hp w17e LCD Monitor வாங்கினேன். நல்லாத்தான் இருந்தது. இப்போ ரெண்டு நாளா திரையில் pink நிறத்தில் மேலிருந்து கீழாக ஒரு கோடு வருகிறது, அந்தக் கோட்டில் குத்துமதிப்பாக ஏதாவது ஒரு இடத்தில்விரலால் அழுத்தினால் அந்தக் கோடு மறைந்து விடுகிறது, ஆனால் அப்புறம் திரும்பவும் வந்து விடுகிறது. இதற்க்கு தீர்வு உள்ளதா? hp காரனை தொடர்பு கொள்ள வேண்டுமா? ஆம் எனில் எந்த தொலைபேசி எண்ணில் கிடைப்பார்கள்?

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்