உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Friday, September 21, 2012

நீரில் பொறிக்கிறோம்


ஆயிரம் தான் ஆனாலும் காகித நூலில் படிக்கும் சுகம் வருமானு சொல்லிக் கொண்டே கொட்டாவியை விடும் நபரா நீங்கள்? உங்களுக்கு ஒரு செய்தி. உங்கள் அபிமான நூற்செல்வங்களையெல்லாம் இப்போது கிடைக்கும் போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வரும் தலைமுறையினருக்கு பொக்கிஷமாகட்டும். சீக்கிரத்தில் பல நூல்களும் காகித வடிவில் கிடைக்காமல் போகும் அபாயம். உபயமும் உபாயமும் இந்த கணிணியுகம். மின்நூல்களை எளிதில்  தயாரிக்க முடிவதாலும் கணப்பொழுதில் கணக்கின்றி  விற்க முடிவதாலும் பதிப்பாளார்களும் மின்நூல்களையே தெரிவு செய்கின்றனர். அமெரிக்காவில் இந்த வருடம் காகிதபுத்தகங்களைவிட மென்புத்தகங்கள் அதிகமாக விற்று சாதனை படைத்திருக்கிறது. சில என்சைக்ளபிடியாக்கள் கூட காகித பதிப்புகளை கைவிட முடிவு செய்துள்ளன. பல நன்மைகள் இருந்தாலும் தொல்லைகள் தான் நம் கண்ணில் தெரிகின்றது. கணிணிசார் பதிப்புகள் நிலைப்புதன்மையும் நம்பகத்தன்மையும் இல்லாததே முக்கிய காரணம். ஆன்லைனில் உண்மையும் பொய்யும் நிலவ அதின் நிஜத்தை கண்டுபிடிக்க வாசகன் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் நூலக புத்தகங்களில் படிப்பவற்றை வேதவாக்காக எடுத்துகொள்கிறோம். இன்றைக்கிருக்கும் URLகள் மற்றும் மின்புத்தகங்கள் நாளை வாழ்வதில்லை. சமீபத்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளின் அடிச்சுவடுகளை கூட நாம் ஆன்லைனில் சீக்கிரத்தில் இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வள்ளுவர் கால வாழ்வை அவர் சுவடிகள் கல்லில் எழுதப்பட்ட எழுத்துபோல் நமக்காக பதிவு செய்துவைத்திருந்தன. இன்றைக்கும் பயன்பெறுகிறோம். போன வருடம் எகிப்தில்  நடந்து முடிந்ததே மாபெரும் புரட்சி, அதை வரும் காலத்துக்கு எடுத்துச் சொல்ல எங்கே பதிவு செய்துவைத்திருக்கிறோம்?


Email PostDownload this post as PDF

Related Posts by Categories



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொல்வது நிஜம்... மரங்கள் வெட்டப்படுவதால் இனி எல்லாமே மின் நூல்கள் தான்... இன்னும் சில ஆண்டுகளிலே, குழந்தைகள் புத்தகம் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை... Laptop, Tablet, etc., இயக்க மின்சாரம்...?...?...? இப்போதே ஆறு முதல் ஏழு மணி நேரம் தான் இங்கு மின்சாரம் உள்ளது...

Jafar ali said...

சிந்திக்க வேண்டிய பதிவு!

Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்