சென்னை மாதவரம் வீட்டிலுள்ள டிவியில் நீங்கள் என்னவெல்லாம் சேனல்கள் பார்க்கமுடியுமோ அவற்றையெல்லாம் இப்போது நீங்கள் சிக்காகோ பிரின்ஸ்டன் அவென்யூவிலுள்ள உங்கள் வீட்டிலிருந்தும் பார்க்கலாமாம்.எப்படி இது சாத்தியம்.என்னவெல்லாம் தேவை இதற்கு?.
இந்தியாவில் தேவையானது ஒரு டிவி,கேபிள் இணைப்பு மற்றும் நல்ல இணைய இணைப்பு.சிக்காகோவில் தேவையானது நல்ல இணைய இணைப்பும் கணிணியும்.$149-க்கு கிடைக்கும் HAVA unit எனும் இக்கருவியை இந்திய வீட்டு டிவியில் முறைப்படி இணைத்துவிட்டால் சிக்காகோவிலிருந்து உங்கள் கணிணி/இணையம் வழி அந்த சென்னை டிவியை பார்க்கலாம்.(Hava மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும்).ஏறக்குறைய அனைத்து சேனல்களையும்.எந்தஅமெரிக்க டிவி சந்தாதார கணக்கும் இல்லாமல் பார்க்கலாம்.மேலும் Tivo போல் நிகழ்ச்சிகளை சேமித்து வைத்து பிற்பாடு பார்க்கும் வசதியும் இதில் உண்டு என்கிறார்கள்.டெக்னாலஜி துள்ளியோடிக்கொண்டிருக்கிறது.
http://www.snappymultimedia.com/products_hava_hd_pro.htm
Watch Indian Local Tv Channels from USA and worl wide Remote Viewing Over The Internet
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Sunday, December 17, 2006
சென்னை டிவி சானல்களை சிக்காகோவிலிருந்து பார்க்கலாம்
Posted by
PKP
at
12/17/2006 01:32:00 AM
Labels: Tips
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஐயையோ நான் மாதவரத்தில் இல்லையே. நங்கநல்லூரில் அல்லவா இருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Looks very much like Slingbox but never heard of Hava before.
நன்றி கேபி.
அருமையான தகவல்.
முயற்சி செய்கிறேன்.
இங்கிருக்கும் குழந்தைகளின் ஆர்வங்கள் வேறாக இருப்பதால் அதற்கேத்த நடவடிக்கைதான் எடுபடும். இங்கேயே இருக்கும் குடியுரிமை பெற்ற வயதானவர்களுக்கு இது ஒரு மாற்றாக இருக்கலாம்.
டோண்டு சாருக்கு எப்பவுமே குறும்பு தான். :)
Partha!
Yeah You are right.Almost both do the same.
வல்லிசிம்ஹன்,
சரியே,சில சமயம் டிவி சந்தா பில்லே (முக்கியமாய் desi channels)எகிறிவிடுவதும் இன்னொரு காரணம்.
வருகைக்கு நன்றி.
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு நெட் டிவி என்று ஒன்று கூட வந்த ஞாபகம்.ஆனால் அது வேறு முறை.
நெட் டிவி பற்றி அவ்வளவாய் நினைவில்லை.
தகவலுக்கு நன்றி வடுவூர் குமார்!!
Post a Comment