உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Thursday, July 31, 2008

ஐபோன் 3G சில நிறைகளும் குறைகளும்


ஐபோன் கைக்கு வந்து இன்றைக்கு ஒரு வாரம் ஆகிவிட்டது. ரொம்ப விளையாடவில்லை. USB கேபிள் கொடுத்திருக்கின்றார்கள்.எனினும் இதுவரை அதை கணிணியோடு இணைக்க வில்லை.வைரஸ் ஏதாவது வந்துவிடப்போகின்றது என்றாள் நேகா. எங்கிருந்தாலும் மெய்மறந்து யூடியூப் பார்ப்பதிலேயே சமயம் போகின்றது.3G அலைவரிசை உள்ள இடங்களில் வசிப்போருக்கு கொண்டாட்டம்தான்.(USA-ல் 3G வசதி உள்ள இடங்கள் Map இதோ).அதாவது எங்குபோயினும் அகலப்பட்டை வேகம் உங்கள் ஐபோனில் இருக்கும். 3G இல்லா இடங்களில் EDGE அலைவரிசை கிடைக்கலாம்.அது கொஞ்சம் வேகம் குறைவாய் இருக்கும். இருந்தாலும் அவ்வளவு மோசமாய் இல்லை.அப்பார்ட்மென்டில் இருக்கும் போது வீட்டு Wi-Fi-யை அது பிடித்துக்கொள்ளும். அப்படித்தான் நியூஜெர்சி மொகுலில் டின்னருக்காக போகும்போது காரின் சிடிகொத்தை மறந்துவிட்டோம். தமிழிசை இன்றி போரடித்தது. கோபாலுக்கு பட்டென ஒரு யோசனை. காரின் Ipod அடாப்டரிலேயே iPhone -ஐ செருகி நாங்கள் விரும்பி கேட்கும் தமிழ் பாடல்களை யூடியுபில் லைவாக ஓடவிட்டு DJ ஆனாள் நேகா. ஆமாம் விரல் நுனியில் உலகம்.


3G தொழில் நுட்பம் நம்மை பெரிதும் மாற்றிவிடும் போலிருக்கின்றது. இந்தியாவில் அடுத்த மாதம் வோடாபோனும் ஏர்டெல்லும் ஐபோனை அறிமுகப்படுத்துகின்றதாம். ஆனால் முக்கியமான அந்த 3G அலைவரிசை இந்தியாவில் வர இன்னும் கொஞ்ச நாள்பிடிக்கும். எப்போதோ வந்திருக்க வேண்டியது. பாதுகாப்பு அது இதுவென கூறி நம் அமைச்சர்கள் அதை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்திருக்கின்றார்கள்.

ஐபோன் 3G சில நிறைவுகளும் குறைபாடுகளும்.

நிறைவுகள்.

  • மட மட வென அதிவேக இணையம்.
  • யூடியூப் வீடியோக்கள் அட்டகாசமாய் ஓடுகின்றன.
  • விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
  • Pdf கோப்புகளை படிக்க முடிகின்றது.
  • Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
  • கேமரா உதவியால் நல்ல துல்லிபமான டிஜிட்டல் படங்களை எடுக்கமுடிகின்றது.அப்படியே ஆன் த ஸ்பாட்டில் மின்னஞ்சலும் செய்துவிடலாம்.
  • விமானம் ஏறியதும் வயர்லெஸ் வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
  • ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதி.
  • கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
  • புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
  • எரிச்சலூட்டும் No booting time, No logon time
  • அதனால் Instant email checkup, Instant Browsing, Instant Youtube
  • பல்வேறு பலரும் உருவாக்கிய இலவச ஐபோன் பயன்பாடுகள் (Updated)
குறைபாடுகள்.
  • தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன(படம்).Safari உலாவியிலிருக்கும் Iphone emulator பொய் சொல்லுகின்றது நெஜமாலுமே.
  • கேமராவில் ஸூம் வசதியில்லை (ரொம்பவும் ஆசைதான்).
  • அவுட் ஆப் பாக்ஸ் ஐபோனில் வீடியோ பதிவு செய்யும் வசதியில்லை. ஆனால் அது ஏற்கனவே ஹேக்கப்பட்டு ஐபோனுக்கான வீடியோ ரெக்கார்டிங் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
  • GPS நீங்கள் இருக்கும் இடத்தை காட்டுகின்றது, போக வேண்டிய இடத்துக்கான turn by turn direction-ம் கொடுக்கின்றது. ஆனால் சாதாரண ஜிபிஎஸ் போல் குரல் வழி வழிநடத்தும் வசதியில்லை. இதுவும் மென்பொருள் சமாச்சாரமாகையால் எளிதில் மாற்றப்பட்டுவிடலாம்.
  • கூகிள் வீடியோக்களை பார்க்க சில தந்திரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
  • AT&T-யை பொறுத்தவரை, ஐபோனை மோடமாக பயன்படுத்தி லேப்டாப்பில் இணையம் மேய முடிந்தால் கூட நாம் அதை செய்யக் கூடாதாம்.
  • Flash நுட்ப வசதியில்லை.(Updated)

கையடக்க இந்த ஐபோன் பலருக்கும் ஒரு கியூட் கேட்ஜெட். இதுவே சற்று பெரிதாக சிறு புத்தக வடிவில் கீபோர்டு டைப்ப ரொம்ப கஷ்டப்படாத வகையில் ஒரு கேட்ஜெட் வந்தால் நன்றாயிருக்கும் என்பது பலரின் அவா. அதாவது சற்று பெரிய தட்டையான ஐபோன். ஆப்பிள் நிறுவனம் ரகசியமாய் அதற்கான புரோட்டோடைப்பில் ஈடுபட்டிருப்பது போல் தெரிகின்றது. ஐடேப்ளட் (iTablet) என்றோ அல்லது வேறெதாவது பெயரிலோ இந்த வருட இறுதிக்குள் அது சந்தைக்கு வரலாம்.

ஆப்பிள் காட்டில் மழைதான்.

குரான் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கே சிறு மென் புத்தகமாக. Quran Tamil Translation pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Monday, July 28, 2008

கண் இமைக்கும் நேரத்தில் களவு

கரன்சி நோட்டில் கைபடாமலேயே நம்மால் வாழ முடிகின்றது. என்ன வாரறுதியில் லாண்டரி மெசினில் போட மட்டும் சில குவாட்டர்களை தொடுகின்றோம். மற்றபடி அனைத்து லவ்கீகங்களுக்கும் கிரெடிட்கார்டு தான் பதில்.வங்கிச்சேமிப்பு கணக்குகளில் எண்கள் கொஞ்சம் ஏறினால் இரண்டு மடங்கு இறங்குகின்றன. அந்த எண்களில் தான் நம் நாட்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் உலகில் இருக்கும் அத்தனை டாலர்களையும் காகிதமாக்க அமேசான் காடு கூட பத்தாது.நல்ல வேளையாய் சரியான வேளையில் சரியான தொழில்நுட்பங்கள் மனிதனுக்கு வாய்த்துவிடுகின்றது. பணவீக்கமாயினும் அதை சுமக்காமல் அட்டைவழி பிழைத்துப் போய்க் கொண்டிருக்கின்றான்.

இப்படி கடனட்டை நம் வாழ்க்கையை சிறிது எளிதாக்கியிருக்க அடுத்தமுறை உங்கள் கடனட்டையை பயன்படுத்தும் போது கொஞ்சம் உஷாராயிருங்கள் என்கின்றனர் மும்பை போலீசார். நீங்கள் உங்கள் கடனட்டையை அந்த டைகட்டின ஆசாமியிடம் கொடுத்துவிட்டு அரக்க பரக்க பார்த்துக்கொண்டிருக்க அந்த ஆசாமியோ பில் போடுவதோடு தன்னிடம் மறைத்து வைத்துள்ள தன் சொந்த Portable Magnetic Card Reader-ரிலும் ஒரு தேய்ப்பு தேய்த்து விடுகின்றான்.(படம்) அந்த ரீடர் கணப்பொழுதில் உங்கள் கிரெடிட்கார்டை படித்து அதிலுள்ள தகவல்களை மனப்பாடம் செய்துவைத்துக்கொள்ளும். இந்த ஆசாமி அத்தகவல்களை பின் வீட்டில் போய் தன் கணிணி வழி படித்து, அச்சு அசலாய் உங்கள் கிரெடிட் கார்டு போலவே இன்னொரு போலி கிரெடிட்கார்டை தயாரிக்கலாமாம். சந்தைகளில் பயன்படுத்தலாமாம். கதை எப்படி இருக்கு? இப்படி குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட ஒரு கணிணி இஞ்சினியர்கள் கும்பல் மும்பையில் சமீபத்தில் பிடிபட்டுள்ளதாக சொல்கின்றார்கள். கண்ணை மூடிக்கொண்ட பூனைபோல ரொம்ப பேரின் நினைப்பு இதுமாதிரி ஹாக்கிங் செய்தால் எளிதாய் தப்பித்திடலாம் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்பதாகும்.தவறு நண்பரே மிக மிகத் தவறு. சரியான புரிதல்வேண்டும். ஒருவேளை அதற்கு நீங்கள் ரஷ்யா போன்ற இரும்பு தேசத்தில் இருந்தால் சாத்தியமாகலாமாயிருக்கும்.

ஸோ ஷெரேட்டனோ பார்க் இன்னோ,வால்மார்ட்டோ மெக்டானல்சோ உங்கள் கடனட்டையை அடுத்தமுறை கடைக்காரரிடம் தேய்க்க கொடுக்கும் போது அந்த கார்டிலேயே ஒரு கண் இருக்கட்டும். கண் இமைக்கும் நேரத்தில் நீங்கள் களவாடப்படலாம்.ஜாக்கிரதை.

தகவலுக்கு நன்றி:M.Rishan Shareef

ஸ்ரீ ஸாயி ஸத் சரித்திரம் அல்லது ஸ்ரீ சீர்டி ஸாயிபாபாவின் அற்புத வாழ்க்கையும் உபதேசங்களும் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Shri Shirdi Sai Baba life history in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Sunday, July 27, 2008

என் கம்ப்யூட்டிங்

நமது வீடுகளிலுள்ள கணிணிகளையும் சரி அல்லது பெரிய கார்ப்பரேட்டுகளின் செர்வர்களையும் சரி நாம் என்றைக்குமே முழுசாய் பயன்படுத்தியதில்லை. பெரும்பாலான செர்வர் அநேகமாய் எப்போதுமே சும்மாய்தான் இருக்கின்றனவாம். அப்பப்போ வரும் ஒரு சில கோரிக்கைகளை நிறைவுசெய்வதோடு சரி. இப்படி கொள்ளைகணக்கில் கணிணிதிறன் அதனைச் சார்ந்து மின்சாரம் இடம் பணம் பராமரிப்புச் செலவு என அநேக ஐஸ்வர்யங்கள் விரயமாவதால் இன்றைக்கு "ஒரே கணிணியில் பல செர்வர்களையும்" ஓட வைக்கும் விர்சுவலைசேஷன் மற்றும் SAN தொழில்நுட்பங்கள் பிரபலம். நம் வீடுகளிலும் இதைக் கொண்டுவரலாமா? மிச்சம் பிடிக்கலாமா?

உங்களிடமுள்ளதோ ஒரே ஒரு கணிணி. அது ஒரு நல்ல லேட்டஸ்ட் கணிணி என வைத்துக்கொள்வோம் . ஆனால் அதில் விளையாட ஒரே நேரத்தில் மூன்று பொடிசுகளும் போட்டிபோட்டு சண்டையிடுகின்றனர். என்னப் பண்ணுவது?. ஒருவேளை உங்களுக்கு ஒரு கணிணியை பலரும் பயன்படுத்த உதவும் இந்த NComputing தொழில் நுட்பம் உதவலாம். இவர்கள் கொடுக்கும் "X300" என்ற டப்பாக்கள் வழி ஒரே கணிணியை மூன்று மானிட்டர்கள் மூன்று கீபோர்டுகள் வழி மூன்று பொடிசுகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வழி செய்யலாம்.என்ன ஒரு கணிணி வாங்கப் போனால் $500 செலவாகும் இந்த டப்பாக்கள் $73-க்கு கிடைக்கின்றது. ஆனால் ஒரு சின்ன கன்டிசன். எல்லா பயனர்களும் கொஞ்சம் பக்கம் பக்கத்தில் இருக்க வேண்டும்.

நம் ஊர் வீடுகள், பள்ளிகள், சிறு அலுவலகங்கள், பயிற்சி மையங்களுக்கு ஏற்ற சிக்கனமான ஒரு நல்ல தீர்வு. இந்தியாவில் இதற்கான சந்தை பிரகாசமாய் இருப்பதால் இங்கு NComputing டப்பாக்களை முழுவீச்சில் இறக்கிவிட்டிருக்கின்றார்கள். அடுத்தமுறை இதுமாதிரி ஒரு தீர்வு யாருக்காவது தேவைப்பட்டால் என்கம்யூட்டிங்கை அறிமுகப்படுத்திவிடுங்கள். புண்ணியமாய்ப் போகும்.
http://www.ncomputing.com

"காதலெனும் சோலையிலே" தமிழ் புதினம் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Kaathalenum Cholayiley Novel in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Friday, July 25, 2008

சும்மா லைவ்லி

இணையதள புராஜெக்ட்கள் இப்போதெல்லாம் சினிமாப்படம் எடுப்பதுபோலாகிவிட்டது. அமர்க்களமாக வெளியாகும் சில இணையதள சேவைகள் பொசுக்கென போய் விடுவதுண்டு. சேது போல கமுக்கமாக வெளியாகும் சில இணையதளங்கள் சூப்பர் ஹிட்டான கதைகளும் உண்டு. எது ஹிட்டாகும் எது ஃபிளாப்பாகும் என கணிப்பது கஷ்டமாகிக் கொண்டிருக்கிறது. ஷங்கர் போல் ஒவ்வொரு படத்துக்கும் புதுசு புதுசா டைரக்டர்களை கண்டுபிடித்து போட்டால் அந்த வேலை எளிதாகும் போலும்.

பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு வகுப்பு சும்மா இருப்போம். தோட்டங்களில் கொத்திக்கொண்டோ அல்லது வண்ண நூலிழைகளை நெய்து கொண்டோ அல்லது மரப்பெட்டிகளை தட்டிக் கொண்டோ சும்மா இருப்போம். அது போலவே கூகிளில் பணியாற்றுபவர்களுக்கும் வாரத்துக்கு 20% நேரம் வேலையல்லாமல் சும்மா வேறே எதாவது செய்ய அனுமதி கொடுக்கின்றார்கள். அப்படி கூகிளில் யாரோ ஒரு ஐயா சும்மா இருந்த போது தட்டி தட்டி உருபெற்றது தான் இன்றைக்கு சூப்பர் ஹிட்டாக இருக்கும் ஆர்குட்.

இப்போதும் அது போலவே கூகிளிலிருந்து யாரோ ஒரு அம்மா சும்மா இருந்த நேரத்தில் உருவாக்கிய இன்னொரு புராஜெக்ட்டை கூகிள் வெளியிட்டுள்ளது. அதன் பெயர் லைவ்லி.

http://www.lively.com

நம் வலைப்பக்கத்தில் நாம் நிறுவியுள்ள வண்ணமயமான விர்சுவல் 3D அறையில் நான் அதாவது என் அவதார் இருந்து டிவி பார்த்துக்கொண்டிருக்க (அதில் யூடியூப் வீடியோக்கள் ஓடிக்கொண்டிருக்கும்) நீங்கள்,அதாவது உங்கள் அவதார் ஹாய் சொல்லிக்கொண்டே உள்ளே நுழைய விர்ச்சுவலாய் காஃபி சாப்பிட்டுக்கொண்டே நாம் ஊர் கதை உலகக் கதை சாட் செய்யலாம். அப்படியே ஆர்வமுள்ள நண்பர்களும் அவர்கள் அவதாராய் உள்ளே நுழைந்து நம்முடன் கதைக்கலாம். கத்தலாம். சண்டைபோடலாம். எல்லாமே விர்சுவலாக. பாதுகாப்பாக.இது தான் லைவ்லியின் சாராம்சம். Secondlife.com க்கு போட்டி என்கின்றார்கள்.

இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான ஒரு கார்டூன் புராஜெக்ட்டை அறிவுஜீவி கூகிள் அறிமுகப்படுத்துவது பலருக்கும் ஆச்சர்யமே.என்ன நோக்கோடு அது இதை அறிமுகப் படுத்தியிருக்கின்றது என்பது மர்மம் தான். அதில் மறைந்திருக்கும் வியாபார யுத்தி யாருக்குத் தெரியும். விர்ச்சுவல் அறையில் இன்றைக்கு இலவசமாய் கிடைக்கும் டிவி, பர்னிச்சர்கள் மற்றும் என் அவதார் அணிந்திருக்கும் பிராண்டட் ரிபோக் ஷூ எதிர்காலத்தில் இலவசமாய் கிடைக்காமல் போகலாம்.அந்த விர்சுவல் உலகில் உலாவரும் யுவதிகளை கவர பைத்திய உலகம் அவைகளை காசு கொடுத்து வாங்கவும் தயங்காது. அப்படியே அந்த விர்சுவல் உலகின் சுவர்களிலும், என் அவதாரின் டீ சர்ட்டிலும் அட்சென்ஸ் விளம்பரம் இருக்கலாம்.இப்படி காசு உண்டாக்க பல யுத்திகள் நம் கூகிளுக்கு அப்போது உருவரும். இப்போதைக்கு அங்கு கூட்டம் சேர்ப்பதுதான் அதன் பிரதானப் பணி.

லைவ்லியில் நான் பார்த்ததில் விர்சுவல் படுக்கையறை கூட உருவாக்கலாமாம். அப்படியே விர்சுவலாக "அது" செய்யவும் அனுமதி தந்தால் கூட்டம் கூடத்தான் செய்யும் பணம் கொட்டத்தான் செய்யும்.

தகவலுக்கு நன்றி Mohamed IQbal

கொசுறு தகவல்:
செய்திகள் நிறைந்த Google News பக்கம் இப்போது தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி பார்க்கவும்.
http://news.google.com/news?ned=ta_in

இரமணிச்சந்திரன் அவர்களின் "நின்னையே ரதி என்று" எனும் புதினம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Ninaiye Rathi Endru Tamil Novel pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, July 22, 2008

ஹாய்போன்

ஐபோன் 3ஜி சந்தைக்கு வந்த வெள்ளி மறுநாளே நேகா ஒரு AT&T கடையைத் தேடிப்போய் தனக்கென ஒரு ஐபோனை முன்பதிவு செய்து வந்திருந்தாள். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அந்த AT&T ஸ்டோருக்கு அவள் ஐபோன் வந்து சேர அதிக பட்சமாக இரண்டு வாரங்கள் ஆகும் என சொல்லியிருந்தார்கள். அன்றையிலிருந்தே மிக ஆர்வமாக காத்திருந்தாள் நேகா. இன்றைக்கு காலையில் பெடக்ஸ்(Fedex) வண்டியில் டெலிவரிக்காக அவள் ஐபோன் காத்திருப்பதாக அவர்கள் டிராக்கிங் சொல்லிற்று. கொஞ்ச நேரத்திலெல்லாம் AT&T கடையிலிருந்தே அவளுக்கு அழைப்பு வந்தது."உங்கள் ஐபோன் ரெடி மேடம்".

நேகாவின் டொயாட்டோ கேம்ரியில் கும்பலாய் இன்று மாலையில் கிளம்பினோம். அக்கம்பக்கம் AT&T களில் இல்லாமல் எங்கோ கொஞ்ச தூரத்திலிருந்த அந்த குறிப்பிட்ட iPhone 3G உள்ள AT&T ஸ்டோருக்கு செல்லவேண்டியிருந்தது. முன்கண்ணாடியில் அழுத்தி மாட்டியிருந்த கார்மின் ஜிபிஎஸ்(GPS) வேறு வழிகாட்டுவதை விட்டு விட்டு அவ்வப்போது டமால் டமால் என கீழே விழுந்து எரிச்சலூட்டிக்கொண்டிருந்தது. இது மாதிரி கண்ணாடியில் அழுத்தி மாட்டும் ஜிபிஎஸ்களில் இது ஒரு தொல்லை. அதுவும் இது கோடைகாலமாகையால் வெயிலில் காய்ந்து சீக்கிரமாய் பொத்பொத்தென விழுந்துவிடுகின்றது. கோபால் ஒரு ஐடியா சொன்னான். அந்த ஜிபிஎஸ்சின் கண்ணாடியில் ஒட்டும் பகுதியில் சிறிது தண்ணீர் தடவினால்
சிக்-கென ஒட்டிக்கொள்ளுமென. அப்படியே செய்தோம். அப்புறம் அந்த ஜிபிஎஸ் கீழே விழவே இல்லை.

8GB ஐபோன்3G-யின் விலை 199 டாலர்கள்
அப்புறம் 18 டாலர்கள் ஒருமுறை ஆக்டிவேசன் கட்டணமாக
அப்புறமாக வழக்கமான செல்போன் பில் கூட மாதம் தோறும் 30 டாலர்கள் எக்ஸ்ட்ராவாக டேட்டா பிளான்காக கட்டவேண்டும் - இது தான் ஒரு ஐபோன் வைத்திருக்கும் நேகாவுக்கு ஆகும் செலவுகள்.

ரோல் ஓவராகி சேர்த்து வைத்திருந்த நிமிடங்களெல்லாம் பிளான் அப்கிரேடு செய்ததில் போய் விட்டதில் அவளுக்கு சிறிது வருத்தமே.

மற்றபடி ஐபோன் ஒரு கூலான கைக்கணியாய் இருக்கின்றது. ஒரு துரிதப் பார்வையிட்டதில் கலக்கலாய் இருந்தது. உடனே அக்கம் பக்க Wi-Fi க்களை கண்டுபிடித்து அத்துடன் இணையட்டுமாவென கேட்கின்றது.அப்படி இணைந்தால் நல்ல வேகமான தகவல் பாய்வு கிடைப்பதால் வலை மேய்தல் மிக வேகமாக இருக்கின்றது. யூடியூப் வீடியோக்களை, உங்கள் போட்டோக்களை அப்படியே கிரிஸ்டல் கிளியராய் பார்க்க முடிகின்றது. MP3 பாடல்களை இறக்கம் செய்யாமலே கேட்க முடிகின்றது. தமிழ் பிடிஎப்-களையும் படிக்க முடிகின்றது. ஆனாலும் தமிழ் யூனிக்கோடு தளங்கள் இப்போதைக்கு அரைகுறையாய் தான் தெரிகின்றது. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வப்போது அதை அவளிடம் சுட்டு நான் கற்றவற்றை உங்களுக்கும் சொல்வேன்.

அமெரிக்காவில் நீங்கள் வேலை செய்யும் கம்பெனி அல்லது படிக்கும் கல்லூரியைப் பொறுத்து உங்களுக்கு AT&T செல்போன் பில்லில் கொஞ்சம் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.கீழ்கண்ட சுட்டிபோய் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்துபாருங்கள்.
Get Additional Savings through Your Employer or School!
https://www.wireless.att.com/business/authenticate/

சேரன் "உயிர் கொல்லும் வார்த்தைகள்" கட்டுரைகள் தொகுப்பு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Cheran Yuir Kollum Vaarthaigal in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்