உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்

From Blog.PKP.in

Tuesday, August 26, 2008

நேரடி ஒளிபரப்பு செல்போனிலிருந்து

தன்னை சுற்றியுள்ள சூழலின் தாக்கம் எழுதுபவனில் எழுத்துக்களில் எப்படியாவது தெறித்துவிடும் என்பது எத்தனை நிஜம். யாரோடைய எழுத்துக்களையாவது விடாது பின் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு அது புரியும். தூரத்தில் எங்கோ இருந்து எழுதும் அந்த எழுதுபவனில் உள்ளேயும் வெளியேயும் நிகழும் சலனங்கள் உங்களையும் வந்து எட்டும். அப்படித்தான் என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளும் சம்பவங்களும் என் எழுத்துக்களை சில சமயம் வேறு திசையில் திருப்பிச் சென்றுவிடுகின்றன. எனினும் சில நொடிகளை வீணாக்கி என்னை வாசிக்க வருபவர்களுக்கு கொஞ்சமேனும் உருப்படியாய் எதாவது கொடுக்க வேண்டும் என்பது தான் என் அவா.

நண்பர் செல்வா எழுதியிருந்தார், "என்ன பிகேபி, நீங்க இப்போ அதிகமா ஐபோன் மேட்டர சொல்லுறீங்க .ஸோ நீங்க ஐபோன் வாங்கிட்டீங்களோ :)" வென.
பாருங்கள், எப்படி என் எழுத்துக்கள் என்னை காட்டிக் கொடுக்கின்றன.

இந்த ஐபோன் மேளாவின் கடைசியாய் நான் தெரிந்து கொண்ட ஒரு சுவாரஸ்ய விசயத்தை மட்டும் இங்கே உங்களுக்கு சொல்லிவிடலாமென்றிருக்கின்றேன்.

போகக்கூடாத இடமொன்றிற்கு போய் இருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். கேர்ள் ஃபிரண்டிடமிருந்து செல்போன் கால் வருகின்றது. "டர்ன் ஆன் த கேமரா டியர். உன்னை பார்க்கணும் போல ஆசையாய் இருக்கு"
பகீர் என்றிருக்கும் உங்களுக்கு.

ஆனால் அவளோ வீட்டில் தன் கணிணியில் உங்கள் வலைப்பக்கத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருப்பாள். உங்கள் செல்போன் கேமரா நீங்கள் படம்பிடிப்பதற்கேற்ப உங்கள் சுற்றுபுறத்தை படம் பிடித்து அதை உடனுக்குடன் ஸ்டிரீம் பண்ணி இணையத்தில் ஏற்றி அதை உங்கள் வலைப்பக்கத்தில் காட்டிவிடும். ஏடாகூடாமாகிப் போய்விடுமேப்பா என்கின்றீர்களா. ஆமாம் அதுவும் இப்போது சாத்தியம்.

அதாவது இன்ஸ்டன்ட் வெப்கேமாக இணையத்தில் உங்கள் செல்போன் கேமராவை வேலை செய்யவிடலாம்.

லேபர்டே ஹாலிடேஸ் வருகின்றது. சிக்காகோவிலிருந்து Cedar Point பூங்காவரைக்கும் போகும் முழு டிரிப் மற்றும் அங்கே வாட்டர் பார்க்கிலும் ரோலர்கோஸ்டரிலும் நாங்கள் கிறங்குவது அத்தனையையும் என்னால் லைவாய் அதாவது நேரடியாய் என் செல்போன் கேமராமூலம் இணையத்தில் ஒளிபரப்பு செய்ய இயலும்.

இந்த 3ஜி அலைவரிசையால் இப்படி நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.
எல்லோரும் twitter ஆனது போல் இனி எல்லோரும் Qikker ஆகலாம்.
உங்கள் செல்போனில் இந்த வசதியை கொண்டுவரலாமாவென கீழ்கண்ட சுட்டியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Phones qik support list.
மேலும் விவரங்களுக்கு http://qik.com

எதற்கும் இப்போதே கேமரா இல்லாத செல்போனாய் பார்த்து ஒன்று வாங்கி வைத்திருக்க முடிவெடுத்திருக்கின்றேன்.

பிரபல தமிழ் சிறுகதைகள் தொகுப்பு இங்கே சிறு மென் புத்தகமாக. Popular Tamil Short Stories pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Sunday, August 24, 2008

ஏதோ ஒரு பாட்டு

நம் குரல்தனை எழுத்துக்களாக மாற்றும் speech recognition நுட்பம் வளர்ந்துகொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அது இந்த அளவுக்கு வளர்ந்துவிட்டிருப்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

FM-ல் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்கின்றோம். ஏனோ அது பிடித்துபோய்விட்டது. நம்மை அறியாமலே நாம் அதை முணுமுணுக் கொண்டே வீடு வருகின்றோம். கவுச்சில் (Couch) உட்காரும் போது மீண்டும் அந்த பாடல் நினைவுக்கு வருகின்றது. இன்னொரு முறை அந்த இனிய இசையை கேட்டால் நன்றாய் இருக்கும் போல் தோன்றுகின்றது. ஆனால் அது என்ன பாடல், யார் பாடியது, எந்த ஆல்பத்திலிருந்து என ஒன்றுமே தெரியாது உங்களுக்கு. என்ன செய்வது இப்போது?

மிடோமி (midomi) உங்களுக்கு உதவுகின்றது. நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் மிடோமி இணையதளம் போய் அந்த பாடலை 10 நொடிகள் பாடி அல்லது hum-மி காண்பியுங்கள். அவ்வளவுதான். அவர்கள் அந்த பாடலை தேடி உங்களுக்கு கண்டுபிடித்து தருகின்றார்கள். என்னமோ MARS அதாவது Multimodal Adaptive Recognition System என்றொரு தொழில் நுட்பமாம்.இந்த அட்டகாச வேலைகளையெல்லாம் செய்கின்றது. டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பாடல் என்னப் பாடல் என கண்டுபிடிக்க மிடோமியிடம் சில செக்கண்டுகள் ரெக்கார்டு பண்ணி காட்டினாலே போதும் நொடியில் அது அந்த பாடல் பற்றிய முழு ஜாதகத்தைம் வைத்துவிடுகின்றது. iPhone-னிலும் இது கையடக்க பயன்பாடாய் இலவசமாய் கிடைக்கின்றது.

http://www.midomi.com

Backstreet Boys-ன் "Show me the meaning" பாடலை எனது கனகனத்த குரலில் பாடிக்காண்பித்தேன். மிடோமி உடனே அதை கண்டுபிடித்து விவரத்தை தெரிவித்ததோடல்லாமல் அந்த பாடலின் யூடியூப் வீடியோக்கான சுட்டியையும் கொடுத்து அசத்தியது. ஆச்சரியமாய் இருந்தது.

இது போல தமிழிலும் வர இன்னும் கொஞ்சநாள் தவம் இருக்கவேண்டும்.

அப்போது நாம் இருமினாலும் தும்மினாலும் அது யாருடைய இருமல் யாருடைய தும்மல் என கணிணியார் கரேட்டாக கண்டுபிடித்துச்சொல்வார்.

விதைகள் கிறிஸ்தவ தமிழ் மென்நூல்.Vithaikal Christian Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Thursday, August 21, 2008

சிறு துளிகள்


இணையம் வந்தாலும் வந்தது இன்றைக்கு அங்கு பணம் சம்பாதிக்க பலமார்க்கங்கள் இருக்கின்றன. அதற்காக நாம் சும்மா இருந்தால் போதும் அது கொட்டிக்கொடுக்கும் கற்பகதரு என்றர்த்தமில்லை.விற்க உங்களிடம் ஏதாவது ஒரு சரக்கு இருக்கவேண்டும். வாங்குவதற்கு உலக அளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் நான் கண்ட ஒரு உதாரணத்தையே இங்கும் உங்களுக்கு எடுத்துக்காட்டாக்க விழைகின்றேன்.

மீண்டும் இந்த ஐபோனை பற்றியே இங்கு பேசுவதால் கோபித்துக்கொள்ள வேண்டாம். இந்த ஐபோனின் ஒரு மிகப்பெரிய பாஸிட்டிவ் பாயிண்ட் அதன் SDK அதாவது Software Developement Kit. இந்த மென்பொருள் கிட்டை வைத்து ஐபோனுக்கான பயன்பாட்டு மென்பொருள்கள் பலவற்றை மினி மினியாக ஒருவர் இஷ்டத்துக்கு தயார் செய்து கொள்ளலாம். என்ன, கொஞ்சம் Objective C மொழி தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு Mac-OS X உள்ள கணிணிப்பொறி மற்றும் ஒரு ஐபோன் தேவைப்படும். அருமையான, பலருக்கும் பயன்படும் ஒரு சிறுபயன்பாட்டை படைத்து அதை ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோரில் விலைக்கு வைத்தால் கூவிக் கூவி நாம் விற்கத்தேவையில்லை. இன்றைக்கு மில்லியன்கணக்கில் ஐபோன்கள் மார்கெட்டில் உள்ளன. இதில் ஒரு சொற்ப சதவீதத்தினருக்கு மட்டும் டாலர் ஒன்றுக்கு உங்கள் அப்ளிகேசனை விற்றாலும் கொடிகட்டிப் பறக்கலாம்.

அப்படியே Apple App Store-ல் மேய்ந்து வந்த போது ஒரு தமிழ் பெயர் அடிபட்டது. முத்து ஆறுமுகம் (Muthu Arumugam).திண்டுக்கல் அருகே காட்டுப்புதூர் என்ற குக்கிராமத்திலிருந்து படித்து வெளியேறியவர்.இவர் தானே டெவலப்செய்த TamilDaily எனும் ஒரு iPhone அப்ளிகேஷனை $0.99-க்கும் Upcoming Plus எனும் ஒரு அப்ளிகேஷனை $1.99-க்கும் அங்கு விற்றுவருகின்றார். மகிழ்ச்சியாய் இருந்தது. யாருக்குத் தெரியும் அந்த சிறு துளி சிறு துளிகள் சேர்ந்து பெரு வெள்ளமாகலாம். புரோகிராமிங் படிச்சு தொலச்சோமில்லையேனு வருத்தமாயிருந்தது.

செம்மல் நபியைக் காணச்செல்வோம் எனும் இஸ்லாமிய தமிழ் மென்னூல் இங்கே உங்கள் இறக்கத்துக்காக. Chemmal Nabiyai Kaanach Selvoom Islamic Tamil ebook in pdf format Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF

Tuesday, August 19, 2008

திருத்தப்படும் நிஜங்கள்

டிஜிட்டல் யுகத்தின் இன்னொரு மாயை இந்த போட்டோஷாஃபிங். ஃபார்வேர்டு மெயில்களில் நிஜமென வரும் படங்களில் பெரும்பாலானவை போட்டோஷாப்போ அல்லது பிற இலவச போட்டோ எடிட்டர்கள் வைத்தோ அருமையாக எடிட்செய்யப்பட்டவையே.எளிதில் நாம் பொய்யென முடியாது.அப்படியேத்தான் திருமண தகவல் தளங்களிலும். போட்டோவை பார்த்துவிட்டு மட்டும் ஏமாந்துவிடக்கூடாது. நம்மாட்கள் படங்களில் டச்சப் கொடுப்பதில் சமர்த்தர்.பெரும் கார்ப்பரேட்டுக்காக வேலைப்பார்க்கும் விளம்பர டிசைனர்களை விட இது மாதிரியான அமெச்சூர் போட்டோஷாப் கலைஞர்கள் வித்தகர்களாய் இருக்கின்றார்கள்.

கீழே பாருங்கள் சில பெருசுகளின் போட்டோ எடிட்டிங் திறமையை

Time பத்திரிகை வரைந்த மெக்கெயினின் கை. இது ஒரு புது விதமான ஸ்டைலாம். நாம் ஒத்துக்க வேண்டியதுதான்.


Tommy Hilfiger-ன் விளம்பரம்.அந்த பெண்ணின் இடதுகால் எங்கே போச்சுப்பா?


Kmart ஃப்ளையரில் சிறுவனை குறுக்கேவெட்டிய கொடுமை.


KFC-யின் கேவலமான சிக்கன் பக்கெட் போட்டோ ஒட்டல். நன்றாக உற்றுப்பாருங்கள் தெரியும்.


Microsfot-ன் தடம் மாறிய ஓடு தளம்.


Gap-ன் போட்டோஷாப் திறமை.


இந்த பொதுஜன பிரபல போட்டோ எடிட்டிங் டிரெண்ட் அரசியலிலும் புகுந்து சர்ச்சையை அவ்வப்போது கிளப்புவது இன்னொரு நவீன நோக்காடு. சில மாதங்களுக்கு முன் ஈரான் ஏவுகணை சோதனை செய்ததாக வெளியான அந்த மூன்று ஏவுகணைகள் சீறிப்பாயும் படம் பிரபல நாளிதழ்களிலெல்லாம் முதற்பக்கத்திலேயே வெளியானது.அப்புறமாகத்தான் யாரோ கண்டுபிடித்தார்கள். அந்த படம் எடிட்செய்யப்பட்டது என்று.என்ன செய்வது. அரசியலில் இதெல்லாம் செய்யவேண்டியிருக்கின்றது.

எடிட்செய்யப்பட்டு வெளியானதும்

நிஜமும்


இங்கே மட்டும் என்ன வாழுதாம். இரட்டைகோபுர விமானத்தாக்குதல் வீடியோவில் விமானம் ஒன்று ஒரு கோபுரத்தில் மோதி அதன் மூக்கு எந்த பாதிப்பும் இன்றி மற்ற பக்கத்தில் வெளிவருகின்றது.அது என்ன மாயம் என இன்னொரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர்.

நிஜமாகவே நிஜம் இக்காலங்களில் எங்கும் அபூர்வமாகிவருகின்றது.

குடந்தை ஸ்யாமா சதுரகிரி யாத்திரை ஆன்மீகப்புத்தகம் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Kudanthai Syaama Sathuragiri Yaathirai in Tamil pdf ebook Download. Right click and Save.Download

Sathuragiri temple location on google map
Sathuragri Mahalingam Temple located near mallapuram border of madurai,virudhunagar districts. 18 siddhars caves, mahalingam, santhana lingam (lord sivas) temples are located in forests.


Email PostDownload this post as PDF

Monday, August 18, 2008

ஐ.டி சரீரங்கள்

கொலஸ்ட்ரால் பிரச்சனையும், பிளட் பிரஸர் பிரச்சனையும் ஐ.டி காரர்களுக்கேயான ஒரு பிரதான பிரச்சனை. போனமுறை மருத்துவரிடம் ஜெனரல் செக்கப் சென்றபோது கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாயிருக்கு சார், கொஞ்சம் வொர்க்அவுட் பண்ணுங்களேன்னு ஆலோசனை கொடுத்தார். இலங்கைத் தமிழர் அவர். மருத்துவம் படித்து அமெரிக்கா வரைக்கும் வந்து இங்குள்ள தொல்லைபிடித்த தேர்வுகளையெல்லாம் எழுதி பாஸ்செய்து மருத்துவராகி இருக்கின்றார். இப்படி நம்மிடையேயிருந்து இங்கு வந்து சாதித்த சாதாரணமானவர்கள் இங்கு அநேகம். கேட்டால் தோல்வியில் துவண்டுவிடாமல் வாய்ப்புக்காக எப்போதும் விழித்தே இருக்கவேண்டும் என்பார்.

கொலஸ்ட்ரால் பிரச்சனையை சமாளிக்க ஓட்ஸ் சீரியலுக்கும் ஆலிவ் எண்ணைக்கும் தற்காலிகமாக மாறியிருக்கின்றேன்.
சர்க்கரையிலிருந்து இன்னும் கொஞ்சநாட்கள்கூட தப்பித்திருக்கலாமென யாரோ ஐடியா சொன்னதால் இரவு சாதம் சாப்பிடுவதை நிறுத்தியாயிற்று. ரொட்டி, சப்பாத்தி இல்லையென்றால் கோதுமை நூடுல்ஸ்.
தினமும் ஒரு ஆப்பிளும் வாழைப்பழமும் சாப்பிடுவது கூட நல்லதாம்.
காலையில் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீரும் முக்கியம்.
இப்போது சம்மர். இருள்வர ஒன்பது மணியாகின்றது. அதனால் மாலையில் கும்பலாய் கிரிக்கெட் ஆட முடிகின்றது. வேர்க்க வேர்க்க பூங்காவில் நடக்க முடிகின்றது. ஆனாலும் எவன் துப்பாகிவைத்திருப்பானோ என்ற பயமும் உண்டு. குளிரத் தொடங்கியவுடன் ஜிம் கண்டிப்பாக செல்லவேண்டும்.

சில மென்பொருள் எஞ்சினியர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் ஏனோ இங்கு நினைவுக்கு வந்து தொலைக்கின்றது. அபசமாய் இங்கு நான் சொல்ல விரும்பவில்லை.

ஆமாங்க இந்த டிவியும் கம்ப்யூட்டரும் நம்மை மெல்ல மெல்லக் கொல்கின்றதாம். வியர்வை வெளியேறுவதில்லையே தவிர மூளை கன்னாபின்னாவென உழைக்கின்றதே. அதிலும் சவாலான வேலை வந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் தொடர்ச்சியாய் நம் மூளையை இயக்குகின்றோம். நம்மில் அநேகம் பேருக்கு அங்கு சம்பளம் தெரிவதில்லை சவால் தான் கண்முன்னே தெரியும். அதனால் தானே நம் ஆட்கள் அதில் நம்பர் ஒண்ணாய் இருக்கின்றார்கள்.

ஐ.டியிலிருந்து சம்பந்தம் வருகிறது என்றாலே நம்மூர் பெண்கள் அலறுகின்றார்களாம்.இது சாப்ட்வேர்காரர்கள் எதிர்நோக்கும் இன்னொரு பிரச்சனை.கம்யூட்டரே கதியென கிடப்பானாம் அவன்.
கணவனும் மனைவியும் ஐ.டியிலேயே இருந்தால் சப்தமும் இருக்காது சண்டையும் இருக்காது. ஆளுக்கொரு லேப்டாப்பில் மூழ்கிவிடுவார்கள்.Google talk-ல் Goodnight சொல்லிக்கொள்வார்கள்.

மாதம் ஒருமுறை வழக்கமாய் அலுவலகம் வந்து உட்காரும் அந்த செவிலியம்மா போன வாரம் வந்திருந்தார்கள். அப்படியே ஒரு ஓரத்தில் அமர்ந்து ஆர்வமுள்ளோருக்கு பிளட் பிரசர் செக் செய்வது அவர்கள் வழக்கம். எனது கையை பிடித்து ஒரு பம்பை அழுத்தி சோதித்து little above normal என்றார்கள். "ரொம்ப டென்சன் ஆகாதீங்க, ரொம்ப யோசிக்காதீங்க, நல்லா தூங்குங்கனு" அறிவுரை கொடுத்தார்கள்.

கோபாலும் அதை ஆமோதித்து "ம்" கொட்டினான்.
"ரொம்ப பதிவுகள் எழுதி உடம்பை கெடுத்துக்காத" என்றான்.

அமரர் கல்கியின் படைப்பு மோகினித்தீவு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Kalki Mohini Theevu in Tamil pdf ebook Download. Right click and Save.Download


Email PostDownload this post as PDF
Related Posts Plugin for WordPress, Blogger...

சமீபத்திய பின்னூட்டங்கள்