நம்மில் பலர் அன்று கணிணி காலத்தை தொடக்கியபோது, அக்காலத்திலேயே புகழ்பெற்றிருந்தவை மென்பொருள்கள் வோர்ட் ஸ்டாரும் (WordStar), லோட்டஸ் 123 யும்(Lotus123)
. இப்போது ஆபீஸ் வோர்ட், எக்ஸெல் என்று எங்கோ போயிருந்தாலும் பழையன எளிதில் மறக்கப்படுவதில்லை. இதில் லோட்டஸ்123யும் ஒன்று-அது பற்றிய சுவாரஸ்ய கதை ஒன்று இங்கே. இதை உருவாக்கிய லோட்டஸ் நிறுவன நிறுவனர் மிட்ச் கபூர் (Mitch Kapor) இந்தியாவை சேர்ந்த மகரிஷி மகேஷ் யோகியின் (Maharishi Mahesh Yogi) தீவிர தொண்டராம்.Transcendental Meditation எனும் தியானக் கலையை போதிக்கும் அளவு தேர்ச்சி பெற்றிருந்த மிட்ச் கபூர் தான் உருவாக்கிய மென்பொருள் நிறுவனத்துக்கு பெயரிட முனைந்தபோது யோகாசன தியான நிலையில் ஒன்றான பத்மாசனத்தை (Padmasana) குறிக்கும் தாமரையை அதாவது லோட்டஸ்
எனும் பெயரை தெரிந்தெடுத்தாராம்.பிற்பாடு லோட்டஸ் 123,லோட்டஸ் டாமினோ,லோட்டஸ் நோட்ஸ் என அநேக மென்பொருள்களை வெளியிட்ட இந்நிறுவனம் 1995-ல் IBM-ஆல் வாங்கப் பட்டது.
பெயர் மிட்ச் கபூர் எனவும் யோகாசன தியானத்தில் ஆர்வமும் உள்ளதால் மிட்ச் கபூர் ஒரு இந்தியரென நினைத்து விட வேண்டாம்.இவர் குடும்பம் ரஷ்யா ஜார்ஜியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்ததாம்.
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Wednesday, February 21, 2007
லோட்டஸ் 123 யும் நம்மூர் பத்மாசனமும்
Posted by
PKP
at
2/21/2007 03:04:00 PM
Labels: Logo Secret
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
do you have a tamil moive
do you have a tamil moive
Post a Comment