திரைப்படம் : ஆழ்வார் (2006)
இசை : ஸ்ரிகாந்த் தேவா
இயக்கம் : செல்லா
பாடியவர்கள் : செந்தில் தாஸ்,உன்னி கிருஷ்ணன்
நடிப்பு : அஜித்,அஸின்
வரிகள்:
ஆண்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
பெண்
ஆ ................. ஆ ......................
ஆண்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்
அருள் மாமழையை வார்க்கும் நீல நயனம்
அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும்
அவன் தான் ரெங்கன் அரங்கன்
மறை நூல் ஞானச் சுரங்கன்
மது சூதன் மழைவண்ணன் திரு நாமம் பட பட இன்பம் (ஹரி)
கோயிலில் நாள் தோறும் பூவாரம் சூட்டியே
பூஜைகள் செய்கின்றவன்
வீட்டினில் அது போலே தாய் தன்னைப் போற்றியே
சேவைகள் செய்கின்றவன்
அவன் தான் நல்ல மனிதன்
அவன் போல் இல்லை புனிதன்
பால் போல் வெண்மை இதயம்
பனி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரைத் தாலாட்டும் தாயாகிப் போனானே (ஹரி)
தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே
பாசங்கள் வார்க்கின்றவன்
தாயெனும் மேலான அன்பை தான் காட்டியே
நேசங்கள் வளர்க்கின்றவன்
இதுதான் நல்ல குடும்பம் இதில் தான் தெய்வம் விளங்கும்
வாழும் மூவர் உறவும் வண்ணத்தமிழின் வடிவம்
இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும் (ஹரி)
Watch Aalwar Video Songs Here
Aalwar Movie
Tamil Movie lyrics aalwar aalvar aalvaar aalwaar alwar alvar Ajith, Asin Chella Srikanth Deva Mohan Natrajan Srikanth Deva,Pallandu Pallaandu UnniKrishnan, Senthil Das
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, February 08, 2007
பல்லாண்டு பல்லாண்டு Aalwar Lyrics
Posted by
PKP
at
2/08/2007 10:57:00 AM
Labels: Tamil Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment