கலக்கிக்கொண்டிருக்கும் UAE-யின், அதாவது துபாயின் Emirates Airline-க்கு சரி சம போட்டியாய் எழும்பி வருவது தான் வளைகுடா நாடான கத்தாரின் தலைநகர் தோஹா-வை மையமாக கொண்டு இயங்கும் Qatar airways.
இருபத்தோராம் நூற்றாண்டின் போட்டிகளை சம்மாளிக்க ,அரேபிய பகுதியின் மையமாய் திகழ இப்போதே மிகப்பெரிய திட்டத்தோடு மாபெரும் புத்தம் புது விமான நிலைய பணிகளை தொடக்கியிருக்கிறார்கள்.
New Doha International Airport (NDIA) எனப்படும் இந்த மெகா புராஜெக்ட் 2004-ல் துவக்கப்பட்டது.2009-ல் முடிவுறும் என எதிற்பார்க்கப்படுகின்றது.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் உருவாகும் இவ்விமான நிலையம் முடிவுறும்போது ஏறக்குறைய தோஹா நகரின் மூன்றில் இரண்டு பங்கு பெரிதாய் இருக்கும்.2009-ல் 24 மில்லியன் பயணிகளை தாங்கும்
சக்திகொண்டதாயிருக்குமாம்.இவ்வெண்ணிக்கை தோஹா நகரின் மக்கள்தொகையை விட 30 மடங்கு அதிகம்.ஒரு மணிநேரத்தில் 8700 பயணிகளை பறந்து விடலாம்.கடல் அலை வடிவில் அமையும் மிகப்பெரிய புதிய பயணிகள் முனையம் 50 கால்பந்து மைதான அளவாயிருக்குமாம். முதல் கட்டமாக 2.5 பில்லியன் டாலர்களும், அடுத்த இரண்டு கட்ட பணிகளுக்கு 5 பில்லியன் டாலர்களும் பட்ஜெட் போட்டிருக்கிறார்கள்.2015-ல் 50 மில்லியன் பயணிகளையும் 2 மில்லியன் டன் சரக்குகளையும் 320000 விமான வருகைகளையும் இவ்விமான நிலையம் தாங்குமாம்.
விமானத்தில் பறத்தல் இனி பஸ் பயணம் போலாக போகின்றது.மையத்தில் இருக்கும் மதுரை 24 மணிநேரமும் பிஸி.அது போல் மத்திய நாடுகள் அதிக உலகளாவிய விமான பாதைகளை இணைக்கலாம்.விலை மலிவு பெட்ரோல் கூடுதல் சவுகர்யம். எல்லோரும் எதற்கோ தயாராகிறார்கள்.
கீழே சில கண்ணைகவரும் எதிற்கால தோஹா விமானநிலையம் படங்கள்
உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்
Thursday, February 08, 2007
பிரமாண்டமாய் உருவாகும் புதிய தோஹா விமானநிலையம்
Posted by
PKP
at
2/08/2007 01:14:00 PM
Labels: Gulf
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment